இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : அமணீஸ்வரர்.தல விருட்சம் : வேம்பு.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : தேவம்பாடி வலசு.
மாவட்டம் :
தல வரலாறு :
முன்னொரு காலத்தில், பகீரதன் தன் மூதாதையர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதற்காக சிவனை வேண்டி, கங்காதேவியை ஆகாயத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தான்.
அவள் பெரும் ஆற்றலுடன் பூமியை நோக்கி வந்ததால் சிவன் அவளை தனது தலையில் தாங்கி, வேகத்தைக் குறைத்தார். பின், ஜடாமுடியை சாய்த்து பூமியில் பாயவிட்டார்.
தன்னைக் கட்டுப்படுத்திய சிவனின் தலையிலேயே கங்காதேவி குடி கொண்டாள். இதனால் இவளை சிவனது மனைவி என்றும் சொல்வர். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் சிவனுடன் பார்வதி, கங்காதேவி ஆகிய இருவரும் அருளுகின்றனர்.
தல பெருமை :
அம்பாள் கோவில்களில் தலவிருட்சமாக இருக்கும் வேப்ப மரம் இந்த சிவத் தலத்தின் விருட்சமாக இருப்பது சிறப்பம்சமாகும். மேலும் சிவன் தனது இரண்டு கண்களையும் பாதி மூடிய தவநிலையில், பூணூல் அணிந்து காட்சி தருவது மற்றொரு சிறப்பாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
இத்தலத்தில் தம்பதியர் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிக் கொள்கிறார்கள். பின் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்கிறார்கள்.
திருவிழா :
இத்தலத்தில் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோவில்,
தேவம்பாடி வலசு - 642 005.
பொள்ளாச்சி அஞ்சல்,
கோயம்புத்தூர் மாவட்டம்.
செல்லும் வழி :
பொள்ளாச்சியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் தேவம்பாடி வலசு பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் இக்கோவிலை அடையலாம். பொள்ளாச்சியிலிருந்து குறித்த நேரத்தில் மட்டும் இவ்வூருக்கு பேருந்துகள் செல்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக