இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பத்மா என்றால் 'தாமரை' என்று பொருள். தாமரை பூவின் வடிவில் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் இதற்கு 'பத்மாசனம்' என்று பெயர். பிராணாயாமம் மற்றும் தியானம் போன்றவற்றை பத்மாசன நிலையில் அமர்ந்து செய்தால் மிகச்சிறந்த பலன்களை பெற இயலும்.
செய்முறை:
- முதலில் தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்டவும்.
- பின்னர் வலது காலை மடக்கி பாதத்தை இடது தொடையின் மீது வைக்கவும். அதுபோல இடது காலை மடக்கி பாதத்தை வலது தொடையின் மீது வைக்கவும்.
- உள்ளங்கால்கள் மேலே நோக்கியவாறு இருக்க வேண்டும்.
- குதிகால்கள் தொப்புளுக்கு கீழே அடிவயிற்றை தொட்டபடி இருக்க வேண்டும்.
- பின் கழுத்திலிருந்து தண்டுவடம் வரை நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.
- கைகள் வஜ்ராசனத்தில் கூறியவாறு முத்திரை வடிவில் இருக்க வேண்டும்.
- சாதாரணமாக மூச்சு விடவும்.
- இதே நிலையில் குறைந்தது அரை நிமிடமாவது இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
- பின்னர் கால்களை மாற்றி வைத்து ஆசனத்தை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.
- ஆசனத்தை முதலில் செய்யும் பொழுது கால்களில் வலி ஏற்படும். ஆனால் தினமும் தொடர்ந்து செய்து வர வலி குறைந்து மிக எளிதாக செய்ய இயலும்.
- தியானம், பிராணாயாமம் செய்ய மிகச் சிறந்த ஆசனம் இது.
- கால்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
- அடிவயிற்று பகுதி உறுப்புகள் மிகச் சிறப்பாக வேலை செய்யும்.
- கால் மூட்டுகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
- அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
- உடல், மன அமைதிக்கு மிகச்சிறந்த ஆசனம்.
- இடுப்பு பலப்படும்.
- சுறுசுறுப்போடு இருக்கலாம்.
- இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக