இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் ஒரே இடத்தில் எப்போதும் உட்காந்து கல்வி கற்பதால் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகின்றன. ஆனால், அவர்கள் அனைத்து குழந்தைகளோடும் அங்கும் இங்கும் ஆடிப்பாடி விளையாடுவதால் மந்தமாக இல்லாமல் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள்.
'மாலை முழுவதும் விளையாட்டு என
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!"
என்று பாரதியார் கூறுவதுபோல குழந்தைகள் மாலையில் ஓடி ஆடி விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை. மாலையில் அவர்கள் செல்போனிற்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
குழந்தைகளுக்கு உற்சாகம்தரும் விளையாட்டுகளில் ஒன்றான ஓடாதே நில் என்ற விளையாட்டை பற்றி நாம் பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பத்து முதல் பதினைந்து குழந்தைகள் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.
விளையாடத் தேவையானது :
பந்து
எப்படி விளையாடுவது?
முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முதல் போட்டியாளரை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.
பின்பு, விளையாடும் மைதானத்தில் நடுவில் வட்டமொன்றை வரைந்துக் கொள்ள வேண்டும். முதல் போட்டியாளர் வட்டத்தில் நடுவில் நின்று கொள்ள வேண்டும். மீதமுள்ள போட்டியாளர்கள் வட்டத்தைச் சுற்றி நிற்க வேண்டும்.
வட்டத்தில் உள்ள முதல் போட்டியாளர் அவர் கையில் உள்ள பந்தை மேல்நோக்கி தூக்கி வீச வேண்டும். பந்தை மேல்நோக்கி வீசியதும் வட்டத்தை சுற்றி நிற்கும் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் கலைந்து வட்டத்தில் இருந்து தூரமாக ஓட வேண்டும்.
பிறகு முதல் போட்டியாளர் பந்தை வீசும் போது மீதமுள்ள போட்டியாளர்களில் ஒருவரின் பெயரை சத்தமாகச் சொல்ல வேண்டும்.
முதல் போட்டியாளர் யாருடைய பெயரை சொல்கிறாரோ அவர் வட்டத்தை விட்டு ஓடாமல், வேகமாக வட்டத்திற்குள் வந்து முதல் போட்டியாளர் மேல்நோக்கி வீசிய பந்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.
அந்த நபர் பந்தை பிடித்த பிறகு அடுத்த நொடியே 'ஓடாதே நில்" என்று கூறுவார். அவர் கூறிய பிறகு வட்டத்தில் இருந்து ஓடிய மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் அந்தந்த இடத்தில் நின்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்தை விட்டு மட்டும் நகரவே கூடாது.
பந்தை பிடித்த போட்டியாளர், நின்றுக் கொண்டிருக்கும் போட்டியாளர்களின் மீது பந்தை குறிப்பார்த்து வீச வேண்டும். பந்து யார் மேலாவது பட்டுவிட்டால், அவர் 'அவுட்" ஆகிவிடுவார். அவுட் ஆனாவர் அடுத்த போட்டியாளராக மாறி மீண்டும் இதே மாதிரி விளையாட வேண்டும்.
விதிமுறைகள் :
நிற்பவர்கள் பந்து தன்மேல் பட்டுவிடாமல் இருக்க குனிந்து வளைந்து கொள்ளலாம்.
பலன்கள் :
கால்கள் வலுப்பெறும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக