இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : முக்தீஸ்வரர்.
தல விருட்சம் : வில்வ மரம் உள்ளது.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : தெப்பக்குளம்.
மாவட்டம் : மதுரை.
தல வரலாறு :
ஒரு சமயம் துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதை கீழே வீசியது.
புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது.
சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த சிவனை பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.
தல பெருமை :
பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் இறைவனை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்வது இதன் சிறப்பாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
இத்தலத்தில், இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் நடைபெறவும் இங்குள்ள இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின்கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் 48 நாட்கள் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.
திருவிழா :
இத்தலத்தில், மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை மற்றும் பிரதோஷ பூஜை ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்,
தெப்பக்குளம் - 625 009.
மதுரை,
போன் : 91 - 452-234 9868, 234 4360
செல்லும் வழி :
மதுரை மத்திய பேருந்துநிலையத்திலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள தெப்பக்குளத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணியிலிருந்து பேருந்துகள் உள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக