இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Instagrm:
pudhiya.podiyan\
Contact us
: oorkodangi@gmail.com
நிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்)
மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்)
போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள
மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த
நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில
அறிபவன் (திருக்),
அறியப்படும் பொருள் (திருஷ்யம்)
போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து
ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.
எவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற
பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்)
வடிவத்தை அடைந்த சீவனின் மனதின் வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற
பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.
நிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம்
மட்டுமே எஞ்சி நிற்கிறது.
எனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த
இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை என்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப
சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில்
மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.
அயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்),
அறிவு, அறியப்படும்
பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள்
இருப்பதில்லை. எனவேதான்
உறக்கநிலைக்கும், நிர்விகல்ப
சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.
நிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு,
நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால்,
அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத்
தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.
பதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்க நிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக