இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
'எனக்கு விளையாடவே பிடிக்காது" என்று குழந்தைகள் யாராவது சொல்வார்களா? நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். அனைவரும் ஒன்றாக கூடி விளையாடும் போதுதான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது, பல குழந்தைகள் எந்த விளையாட்டை விளையாட வேண்டுமென்று சொல்கிறார்களோ அந்த விளையாட்டைத்தான் விளையாடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தைகளும் அவர்களின் ரசனைக்கேற்பவும், அவரது உடல்நிலைக்கேற்பவும் சிலவிளையாட்டுகள் பிடிக்கும். சில விளையாட்டுகள் பிடிக்காது. தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கிப் பழகிக் கொள்ளுங்கள். அதில் மிகவும் சிறப்பானது நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது, அப்படி விளையாடும் போது நல்ல நெருக்கமும் உங்களுக்கிடையே புரிதலும் அதிகமாகும்.
கிராமப்புறங்களில் பல வகையில் சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் கோலிக்குண்டு.
எத்தனை பேர் விளையாடலாம்?
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம்.
விளையாட தேவையானது?
கோலிக்குண்டு.
எப்படி விளையாடுவது?
கோலிக்குண்டு விளையாட்டுகளை இரண்டு வகையில் விளையாடலாம். அவை வட்டத்தினுள் கோலிக்குண்டை வைத்து விளையாடுவது, மற்றொன்று குழியைத் தோண்டி அதனுள் கோலியைப் போட்டு விளையாடுவதாகும்.
குழியினுள் கோலி குண்டை போடும் முறையில் விளையாடும்போது குண்டு தங்கும் ஆழத்திற்கு குழி அமைத்துக்கொள்ள வேண்டும். விளையாடும் நபர்கள் அனைவரும் குழியை நோக்கி கோலிக்குண்டுகளை வீச வேண்டும்.
இவ்வாறு வீசி முடித்த பின்பு எந்த கோலிக்குண்டு குழியில் அல்லது அதற்கு அருகில் விழுந்ததோ அவர்கள்தான் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படுவார். பிறகு அவர் விளையாட்டைத் தொடரலாம். குழியின் மேற்புறத்தின் ஓரமாகக் கட்டை விரலை ஊன்றி, சுற்றியிருக்கும் கோலிகளைத் தனது கோலியால் குறி பார்த்து அடிக்க வேண்டும்.
வட்டத்திலிருந்து வெளியே தள்ளும் முறை :
வட்டத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு அடி தள்ளி கோடு இட வேண்டும். விளையாடும் நபர் அனைவரும் அந்தக்கோட்டிலிருந்து கோலிக்குண்டுகளை தூக்கி எறிய வேண்டும். முதலில் எறிந்தவன் வட்டத்தில் உள்ள கோலி அடிக்கும்போது எத்தனை கோலிக்குண்டுகள் வெளிவருகிறதோ அந்த கோலிக்குண்டுகள் அனைத்தும் அவனுக்கே சொந்தம். இவ்வாறு அனைத்து கோலிக்குண்டுகள் தீரும் வரை விளையாடுவார்கள்.
இந்த விளையாட்டில் வெற்றிப் பெற்றவர்கள் தோற்றவரின் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம். மற்ற வகை ஆட்டத்தில், கோலி அடிப்பவர்கள், மற்றவர்கள் கூறும் கோலிகளை அடிக்க வேண்டும். அவ்வாறு அடித்தால், கோலிகளை பெறுவார்.
குண்டை அடிக்கும் முறை :
கட்டைவிரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் அல்லது ஆட்காட்டி விரலின் விசையால் கோலிக்குண்டை அடிக்க வேண்டும்.
பயன்கள் :
விரல்கள் வலுப்பெறும்.
கூர்மையான கண்பார்வை கிடைக்கும்.
சேமிக்கும் குணம் வளரும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக