Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூலை, 2019

கண்டுபிடிப்பாளர்களையே காவு வாங்கிய கண்டுபிடிப்புகள்.!!

கண்டுபிடிப்பாளராக இருப்பது மகவும் கடினமான காரியமாகும். ஒரு விஷயத்தை கண்டுபிடித்து அது வெற்றி பெற்றால் பாராட்டு கிடைக்கும், மாறாக தோல்வியை தழுவினால் கண்டுபிடிப்பாளரின் நிலைமை சிக்கல் தான். தோல்வியில் இருந்து மீண்டு எழ முடியும் என்றாலும், கண்டுபிடிப்புகளின் போது கருவியின் சோதனையில் தன்னையே உட்படுத்திக்கொள்ளும் ஆய்வாளர்கள், ஆய்வில் தவறு ஏற்படும் போது கண்டுபிடிப்பாளர்களின் உயிரையும் பறித்து கொள்ளும் அளவு அபாயகரமானது.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இவ்வாறு வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை சோதனை செய்து, தங்களது உயிரை விட்டவர்கள் மற்றும் அவர்களின் உயிரை பறித்த கண்டுபிடிப்புகள் குறித்த தொகுப்பு தான் இது.! 

Image result for போல்ஷெவிக் கட்சியின் இணை நிறுவனரான அலெக்சான்டர் பாக்டனாவ்  


01
போல்ஷெவிக் கட்சியின் இணை நிறுவனரான அலெக்சான்டர் பாக்டனாவ் என்றும் இளைமையாய் இருப்பதற்கான ரகசியத்தை கண்டுபிடிக்க முயன்று உயிரிழந்தார். கட்சியை ஆரம்பிக்க உதவியாக இருந்த அலெக்சான்டர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அதன் பின் அறிவியல் பக்கம் தன் பாதையை மாற்றி என்றும் இளமையாய் இருக்க தனது ஆய்வுகளை 1920களில் துவங்கினார்.

 



இரத்தம் 

உடலில் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதன் மூலம் உடலில் புத்துணர்ச்சியாக்கும் பண்புகள் அதிகரிப்பதாக இவர் கூறியதோடு, சுமார் 11 முறை உடலில் இரத்தத்தை செலுத்தியதும் தனக்கு இருந்த கண் பிரச்சனை குணமானதாகவும், தலை முடி உதிரும் பிரச்சனை நின்றதாகவும் கூறினார். பின் ஒரு மாணவரின் இரத்தத்தை தன் உடலில் செலுத்தும் போது திசு நிராகரிப்பு மூலம் உயிர் இழந்தார்

 
வான் ஹூ 

02

 16ஆம் நூற்றாண்டிலேயே ராக்கெட் மூலம் நிலவுக்கு பயணிக்க முயன்று உயிரை விட்டவர் தான் வான் ஹூ. இவர் சிறிய ராக்கெட் நாற்காலி இவரை நிலவு வரை பறக்க செய்யும் என நினைத்தார். 



வெடிமருந்து


சீனர்கள் வெடிமருந்து கண்டுபிடித்து இதை பயன்படுத்தி ராக்கெட் செய்திருந்தனர். வான் ஹூ நிலவிற்கு செல்ல சுமார் 47 ராக்கெட்களே போதுமானது என நினைத்து அவைகளை நாற்காலியில் இணைத்து அதில் உட்கார்ந்து கொண்டு தனது உதவியாளர்கள் மூலம் 47 ராக்கெட்களையும் பற்ற வைக்க கோரினார். சிறிது நேரத்தில் 47 ராக்கெட்கள் வெடித்து வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சியது.

தாமஸ் ஆண்ட்ரூஸ் 



03

டைடானிக் கப்பலின் மூத்த கட்டட வடிவமைப்பாளரான தாமஸ் ஆண்ட்ரூஸ் டைட்டானிக் கப்பலின் முதலும். கடைசியுமான பயணத்தில் கப்பலில் இருந்தார். கப்பலின் வடிவமைப்பின் போது தாமஸ், சுமார் 46 உயிர் காக்கும் அவசர படகுகளை டைட்டானிக் கப்பலில் சேர்க்க கோரினார். எனினும் 20 படகுகள் மட்டுமே வழங்கப்பட்டன. உயிர் 
 
பனிப்பாறையில் மோதி டைட்டானிக் மூழ்கும் தருவாயில் தாமஸ் தன்னை பற்றி நினைக்காமல் மற்றவர்கள் உயிர் பிழைக்க உதவியதாக பலராலும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லி ஸி 
 
04

கிமு மூன்றாம் நூற்றாண்டில் சீனாவின் பிரதமராக லி ஸி பதவி வகித்தார், இவர் ஐந்து தண்டனைகள் என்ற சட்ட முறையை அறமுகம் செய்தமைக்காக பிரபலமானவர். இந்த ஐந்து தண்டனைகளும் குற்றம் எண்ணிக்கையை பொருத்து வழங்கப்படுவதோடு இவை மிகவும் கொடிய தண்டனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
மரணம் 
 

ஐந்து தண்டனைகளை பலருக்கு வழங்கிய பிரதமர் லி ஸி மீதே குற்றம் சாட்டப்பட்டு, தன் குற்றத்தை ஒப்பு கொள்ளும் வரை, ஐந்து தண்டனைகளும் வழங்கப்பட்டது. பின் தான் நடைமுறைப்படுத்திய தண்டனைகளை அனுபவித்தே தன் உயிரை விட்டார்.

தாமஸ் மிக்லி ஜூனியர் 
 
 
05

உலகில் கண்டுபிடிக்கப்பட்ட இரு அபாயகரமான கண்டுபிடிப்புகளுக்கு தாமஸ் பெயர் பெற்றிருந்தார். ஒன்று கார் என்ஜின்களில் லீட் பெட்ரோல் சேர்ப்பது, மற்றொன்று அனைத்திலும் க்ளோரோஃப்ளோரோகார்பன்களை (chlorofluorocarbons-CFCs)சேர்ப்பது. இதில் CFC ஓசோன் படத்தில் ஒட்டை போட வழி செய்தது.

மரணம் 
 
தனது 51வது வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாமஸ் கயிறுகளை பயன்படுத்தி தன்னை கட்டிலில் இருந்து எழ பயன்படுத்தினார். பின் அந்த கயிறுகளிலேயே சிக்கி தனது 55வது வயதில் மரணித்தார்.


பெரிலியோஸ்     
 


06

சித்திரவதை செய்து உயிரை பறிக்கும் கருவியான பிரெஸன் புல் கண்டறிந்த பெருமைக்குரியவர் தான் ஏத்தன்ஸ் நகரை சேர்ந்த பெரிலியோஸ். முற்றிலும் வெண்கலம் கொண்டு வடிவமைக்கப்பட்ட பெரிய காலை மாட்டுச்சிலையில் குற்றவாளிகளை வைத்து அவர்கள் சாகும் வரை சூடு செய்யும் முறை தான் இது.

மரணம் டைரண்ட் லார்டு ஃபலாரிஸ்'இடம் இந்த முறையை பெரிலியஸ் விளக்கினார், இதை கேட்ட டைரண்ட் இந்த கருவியின் முதல் பலியாளாக பெரிலியோஸ் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். தான் கண்டுபிடித்த கருவியிலேயே தன் உயிரை விட்டார் பெரிலியோஸ்.



ஜேம்ஸ் 'ஜிம்' ஃபிக்ஸ்


07

ஜாகிங் எனப்படும் மெதுவாக ஓடும் வழக்கத்தை அமெரிக்காவில் 1970களில் பிரபலம் செய்த ஜேம்ஸ், ஒரு நாள் காலை ஓடும் போது மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இவர் எழுதிய "The Complete Book of Running" புத்தகம் 10 லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையானதோடு 1977களில் அதிக பிரபலமானதாகவும் இருந்தது.

மரணம்

35 வயதிலேயே மாரடைப்பு காரணமாக தன் தந்தை மரணித்ததை தொடர்ந்து தன் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்திய ஜேம்ஸ் ஓடியதால் தான் மரணித்தாரா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. முன்னதாக இவர் அதிக எடை கொண்டிருந்ததோடு தினமும் அளவுக்கு அதிகமாக புகை பிடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது


 ஹார்ரி ஹௌதினி

08

சண்டை பயிற்சி மற்றும் தப்பிக்கும் வழிமுறைகளில் அதிக ஆர்வம் கொண்ட ஹார்ரி தன் வயிற்றில் எத்தகைய வலிமையையும் தாக்கு பிடிக்க முடியும் என தெரிவித்தார். எனினும் இதனை சோதிக்கும் முயற்சியில் தன் உயிரை விட்டார்.


 சோதனை
 

ஒரு நாள் தன் மாணவர் ஒருவர் கேட்டு கொண்டதற்கு இனங்க வயிற்றில் வலியை தாங்க தயாரானார், எனினும் அவர் தயாராகும் முன் மாணவர் தாக்கினார், இதில் நிலை குலைந்த ஹார்ரி அதன் பின் உடல் நல கோளாறு காரணமாக மரணித்தார். 
 
ராபர்ட் லிஸ்டன் 
 
09

இது ஒரு கண்டுபிடிப்பும் இல்லை, இது யாரையும் கொல்லவும் இல்லை, ஆனால் ராபர்ட் லிஸ்டன் 1800களில் வாழ்ந்த திறன்மிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அக்காலத்தில் மயக்க மருந்து இல்லாமல் அறுவவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரணம் 
 
மயக்க மருந்து இல்லாத காரணத்தினார் அதிவேகமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சித்த ராபர்ட் சில வெற்றிகளையும் பல மரணங்களையும் செய்திருக்கின்றார்.
 
 
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக