அறிவியல் ஆய்வாளர்கள் ,விஞ்ஞானிகள்
சிலர் விநோதமான ஆராய்சிகளை செய்து பார்பார்கள். மூளை இயக்கம் சம்பந்தமானவை கொஞ்சம்
ஆழமானவைகள்.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சமீபத்தில் பெங்களுரு டாக்டர்கள் வங்க தேசி ஒருவருக்கு( Taskin Ali A 31 )மூளை நரம்பு சிகிச்சை செய்தார்கள். நோயாளி அப்போது சுய நினைவுடன் கிதார் இசைக்க வேண்டி இருந்தது. மண்டை ஓட்டை திறந்து வைத்து அசைவற்று போயிருந்த விரல் இயக்கத்தை சரி செய்தார்கள். நவீன டெக்னாலஜியில் இது சாத்தியமாகி இருக்கிறது.இப்படிப் பட்ட மனித முளை சிகிச்சை களுக்கு உயிரினங்களை முதற்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள்.. தெரிந்ததுதான்.
குளிர்
ரத்த பிராணியான முதலை இசை கேட்டால் அதன் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?
இந்த
கேள்வியை முன்வைத்து ஓர் ஆய்வை செய்தார்கள். எங்கு? ஜெர்மனில் போஃகும்
யுனிவர்சிட்டியில் [Biopsychology at Ruhr-Universität Bochum (RUB)] டாக்டர்
ஃபெளிக்ஸ் தலைமையில்.
பங்சனல் MRI ஸ்கானிங் தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி பல கட்டங்களில் வித விதமான சங்கீத (இசை )கோர்வைகளை அவை கேட்டால் அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தார்கள்.
பங்சனல் MRI ஸ்கானிங் தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி பல கட்டங்களில் வித விதமான சங்கீத (இசை )கோர்வைகளை அவை கேட்டால் அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தார்கள்.
முதலைகளுக்கு 200 மிலியன் ஆண்டு கால வாழ்வியல் வரலாறு (?!) கொண்டவை. இவைகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமான மூதாதைகள்,முன்னோடிகள் . டினோஸர்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பியல்பு இவைகளுக்கு உண்டு.
சங்கீதங்களை கேட்கும் விலங்குகள், பறவைகள் அவற்றிடையே ஏற்படும் மாற்றங்கள் பத்தி ஏற்கனவே ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.
உதாரணமாக கோபத்தில் இருக்கும் முதலை கருணை ததும்பும் இசையை கேட்டால் சாந்தமாகியும், குத்து இசைக்கு குதூகலமாக்கவும், சோக சங்கீதத்திற்கு சோகமாகவும் தம்மை வெளிப்படுத்தின.
மேலும் இது முதல் கட்ட ஆய்வு என்றும் மேலும் பல கட்ட சோதனைகளை செய்யவேண்டுமாம். உலகின் வெவ்வேறு இடங்களில் வாழும் முதலைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
தேனீக்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியுமா?
தேனீக்களை
ஆய்வுக்கு உட்படுத்துவது அவற்றின் நடவடிக்கைகளை பதிவு செய்வதெல்லாம் சவாலான
விடயங்கள்.
எண்கள்
எண்ணிக்கை அவைகளுக்கு தெரியுமா? எப்படி ஆய்வு செய்வது?
பெரிய கூண்டுகளுக்குள் தொடர்சியான பயிற்சிகளுக்கு அவைகளை உட் படுத்துகிறார்கள். எண்களை கண்டு கொள்ளும் பயிற்சியில் சரியாக செய்தால் பாராட்டாக தேன் கொடுப்பார்கள். இப்படியான பல கட்ட சோதனைகளில் பூஜ்ஜியம் (Zero) அவைகளால் இனங்கான முடியுமா?
பெரிய கூண்டுகளுக்குள் தொடர்சியான பயிற்சிகளுக்கு அவைகளை உட் படுத்துகிறார்கள். எண்களை கண்டு கொள்ளும் பயிற்சியில் சரியாக செய்தால் பாராட்டாக தேன் கொடுப்பார்கள். இப்படியான பல கட்ட சோதனைகளில் பூஜ்ஜியம் (Zero) அவைகளால் இனங்கான முடியுமா?
இரண்டு என்றால் 2 பொருட்கள், 5 என்றால் ஐந்து என்ற
எண்ணிக்கைகளை அவைகள் கண்டு கொண்டன. 2ஐ விட 5 பெரிதா என்பதையும் அவைகள் அடையாளம்
காட்டின. அப்படியாயின் ஐந்தை விட ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியம் சிறியது மற்ற எண்களை
விட ஒன்றுமே இல்லாத அது சிறியது என்பதை சுட்டி காட்டின. ஆச்சரியமாக இருக்கிறது
இல்லையா?
இன்னொன்று அதை விட ஆச்சர்யமான தகவல் மனித குழந்தை எண்களை கற்றுக் கொள்வதை விட (கால கணக்கு) தக்குணூண்டு மூளை கொண்ட இவைகள் சீக்கிரமே கற்று தம் திறமையை நிரூபித்தன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக