சனி, 27 ஜூலை, 2019

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

 
 
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது.
ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.
எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது.
இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2–வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது.
இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார்.

அப்போது அணுஆயுத விவகாரம் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை 2 வாரங்களில் தொடங்கும் என அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்த நிலையில், வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து பார்த்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள வோன்சன் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.34 மணிக்கு ஒரு ஏவுகணையும், 5.57 மணிக்கு மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டன. இந்த 2 ஏவுகணைகளும், 50 கிலோமீட்டர் வரையிலான உயரத்தில், 430 கிலோமீட்டர் தூரம் பறந்துச்சென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், வடகொரியா ஏவிய ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவமும், தங்கள் நாட்டு ராணுவமும் ஆய்வு செய்து வருவதாகவும், வடகொரியா மேலும் சில ஏவுகணைகளை ஏவுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்