உயிரினங்களே வாழத் தகுதி இல்லாத கடல் சாக்கடல் தான். இந்த சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது.
ஜோர்டான் நதி இக் கடலில் வந்து கலக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனத்துக்காகவும் குடி நீர் தேவைக்காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டானும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன.
ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கடலுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் அண்மைக் காலமாக சுருங்கி வருகிறது.
இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக