Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூலை, 2019

சில்லென்ற காற்று... எலியட்ஸ் கடற்கரை


Image result for எலியட்ஸ் கடற்கரை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




சென்னையின் முக்கிய அடையாளம் என்றால் அது கடற்கரைகள்தான். இதில் எலியட்ஸ் கடற்கரையும் அடங்கும். இது சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது. முந்தைய சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக பெசன்ட் நகர் கடற்கரை என்றே அறியப்படுகிறது.

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் :

இக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாக கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது. 1930 இல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலேயப் பெண்ணை காப்பாற்ற தன்னுயிரை தந்த ஓர் டச்சு மாலுமியின் நினைவாக இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

சிறப்புகள் :

சூரியன் எழும்பி வரும் காட்சி...
சூரியக்குளியல்...
அழகிய கடலோர கிராமம்...
வேகமாய் மோதும் அலைகள்...
கலங்கரை விளக்கம்...
நீண்ட மணற்பரப்பு...
கால்களை சுற்றி வரும் நண்டுகள்...
நடை பயிற்சி...
சுத்தமான சில்லென்ற காற்று...
இளைஞர்களின் பட்டாளம்...
அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம்...
கடலில் எத்தனை ஜீவராசிகள் உள்ளன என்று எண்ணும்போது மிக பிரமிப்பாக இருக்கும். தூரத்தில் போகும் மீனவர்களின் படகுகள் அலைகளுடன் சேர்ந்து ஆடி ஆடி அசைவதை பார்ப்பதிலே ஒரு அலாதி இன்பம் கிடைக்கும்.
மனது பாரமாக இருக்கும்போது இந்த கடற்கரைக்கு வந்து சிறிது நேரம் அந்த காற்றை சுவாசித்தால் லேசாகி ஒரு தெளிவு பிறக்கும்.

சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் :

மெரீனா கடற்கரை...
சாந்தோம் கடற்கரை...
அஷ்டலட்சுமி கோவில்...
வேளாங்கன்னி தேவாலயம்...
மஹாலட்ஷ்மி கோவில்...
மாதா கோவில்...
அறுபடை முருகன் கோவில்...

எப்படி செல்வது?

சென்னைக்கு ரயில் ஃ பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பேருந்து, ஆட்டோ வசதிகள் எலியட்ஸ் கடற்கரைக்கு இருக்கின்றன.

ரயில் நிலையம் :

எழும்பூர், சென்ட்ரல்

விமான நிலையம் :

மீனம்பாக்கம்

எப்போது செல்வது?

ஆண்டு முழுவதும் செல்லலாம்.

அருகில் உள்ள இடங்கள் :

இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கண்ணி மாதா கோவில் மற்றும் அஷ்டலட்சுமி கோவில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

எங்கே தங்குவது?

சென்னையின் பல பகுதிகளிலும் தங்கும் விடுதிகள் ஏராளமாக இருக்கின்றன.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக