>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 23 ஜூலை, 2019

    ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns & Uncountable Nouns)


    Image result for Countable Nouns and Uncountable Nouns



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    ஆங்கில பெயர்ச்சொற்களின் வகைகளில் அதிகமாக பயன்படுவது கணக்கிடுப் பெயர்ச்சொற்களும், கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களும் ஆகும். இவற்றை இன்றையப் பாடத்தில் பார்ப்போம். இந்த இரண்டு வகையான பெயர்ச்சொற்களையும் இரண்டு தலைப்புகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

    கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns)

    கணக்கிடுப் பெயர்ச்சொற்களை மிக எளிதாக அறிந்துக்கொள்ளலாம். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய பெயர்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்களாகும். ( Countable nouns can be "counted".)
    No:
    Countable Nouns
    தமிழ்
    1
    bookbookbookbookbook
    பொத்தகம்
    2
    applesshuhashishi
    குமளிப்பழம்
    3
    dog
    நாய்

    4
    cat
    பூனை
    5
    animal
    மிருகம்

    6
    man
    மனிதன்
    7
    person
    நபர்

    8
    bottle
    போத்தல்

    9
    box
    பெட்டி

    10
    coin
    நாணயம்

    11
    computer
    கணனி

    12
    shirt
    சட்டை
    13
    trouser
    காற்சட்டை

    14
    cup
    கோப்பை

    15
    plate
    தட்டு

    16
    spoon
    கரண்டி

    17
    fork
    முற்கரண்டி

    18
    table
    மேசை

    19
    chair
    கதிரை

    20
    bag
    பை

    21
    carton
    அட்டைப்பெட்டி

    22
    bowl
    கிண்ணம்
    23
    calendar
    நாற்காட்டி

    24
    house
    வீடு

    25
    people
    மக்கள்


    உதாரணம்: ஒரு மேசையின் மேல் பொத்தகங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அவை எத்தனை பொத்தகங்கள் என்று அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வோம்? நாம் ஒன்று, இரண்டு, மூன்று, என எண்ணி கணக்கிடுவோம் அல்லவா? ஆம்! அவ்வாறு எண்ணி கணக்கிடக் கூடிய எல்லா பெயர்களுமேகணக்கிடுப் பெயர்ச்சொற்கள்ஆகும்.

    எடுத்துக்காட்டாக:

    a book, two books, three books.
    an apple, two apples, three apples

    கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் ஒருமையாகவோ பன்மையாகவோ இருக்க முடியும். (Countable nouns can be singular or plural.)

    book – books
    apple – apples

    இவ்வாக்கியங்களில் ஒருமை பன்மை பயன்படும் விதங்களை அவதானியுங்கள்.

    My dog is playing.
    My dogs are playing.

    கணக்கிடுப் பெயர்சொற்கள் ஒருமையாகப் பயன்படும் போது ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச் சொற்களை நாம் பயன்படுத்த முடியும். (We can use the indefinite article a/an with countable nouns)

    My wife is a Doctor.
    Sarmilan is an English Teacher.

    எண்ணிக்கையை இலக்கங்களால் ஒன்று, இரண்டு, மூன்று என பயன்படுத்துவதுப் போன்றேகொஞ்சம், ஏதாவது, ஒரு சில, நிறைய” (Some, any, a few, may) போன்ற சொற்களையும் கணக்கிடுப் பெயர்ச்சொற்களுடன் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளன. (We can use some, any, a few, many with countable nouns.)

    I need to buy some new trousers
    Have you got any pens?
    I've got a few dollars.
    I haven't got many pens.

    கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் (Uncountable Nouns)

    எண்ணிக்கை அடிப்படையில் எண்ணி கணக்கிட முடியாதப் பெயர்கள் அல்லது சொற்கள்கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள்ஆகும். (Uncountable nouns cannot be counted.) ஆங்கிலத்தில் இதனை “Mass Nouns” என்றும் அழைப்பர்.

    உதாரணம்:
    No:
    Uncountable Nouns
    தமிழ்
    1
    adviceadviceadviceadvice
    அறிவுரை
    2
    bread sshuhashishi
    வெதுப்பி
    3
    rice
    அரிசி/ சோறு

    4
    sugar
    சீனி
    5
    sand
    மணல்

    6
    flour
    மாவு (தூள்)
    7
    powder
    துகள்/ பொடி

    8
    dust
    தூசு

    9
    jelly
    குழம்பு/ பாகு

    10
    oil
    எண்ணை

    11
    water
    தண்ணீர்

    12
    juice
    சாறு
    13
    milk
    பால்

    14
    gas
    வாயு

    15
    butter
    வெண்ணை

    16
    music
    இசை

    17
    furniture
    தளபாடம்

    18
    coffee
    கோப்பி

    19
    wet
    ஈரம்

    20
    messy
    அசுத்தம்

    21
    rain
    மழை

    22
    knowledge
    அறிவு
    23
    electricity
    மின்சாரம்

    24
    power
    சக்தி

    25
    news
    செய்தி


    சாதாரணமாக கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் ஒருமையானதாகவே கருதப்படுகின்றது. (We usually treat uncountable nouns as singular.)

    எடுத்துக்காட்டாக:

    Milk
    பால்

    இது ஒரு ஒருமை சொல்லாகும். இதனை ஒரு போத்தல் பால், இரண்டு போத்தல் பால், மூன்று லீட்டர் பால் என அதன் கொள்ளளவை அளவிட்டுக் கூறமுடியுமே தவிர; ஒரு பால், இரண்டு பால்கள், மூன்று பால்கள் என பாலை கணக்கிட்டு பன்மையாகக் கூறமுடியாது. அதனால் தான் இவற்றை கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.

    a liter of milk
    a bottle of milk

    இதுபோன்ற கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல், அளவுகளால் அளவிட்டுப் பேசப்படுகின்றது. அதாவது கொள்ளளவுகளை எண்ணிக்கையால் கூறப்படுகிறது.

    எடுத்துக்காட்டாக:

    a glass of water
    ஒரு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
    two glass of water
    இரண்டு கிளாஸ் (அளவிளான) தண்ணீர்
    three glass of water
    மூன்று கிளாஸ் (அளவிளான) தண்ணீர்

    இப்பொழுது விளங்குகின்றதா? மேலும் இதுப்போன்றகணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களைபாகங்களாக, அளவுகளாக, கொள்ளளவுகளாகக் கணக்கிடலாம். அவற்றை கீழுள்ள உதாரணங்களூடாக அறிந்துக்கொள்வோம். இது பிழையற்ற ஆங்கிலப் பயன்பாட்டிற்கு மிகவும் அவசியமானதாகும்.

    water, wine, sugar, cheese, meat, butter, ketchup, mustard, rice, etc.,

    a glass of water

    a bottle of wine

    a spoon of sugar

    a jug of water

    a slice of cheese

    a chunk of cheese

    a piece of cheese

    a piece of meat

    a slice of meat

    a pound of meat

    a bar of butter

    a bottle of ketchup

    a tube of mustard

    a kilo of rice

    a plate of rice

    நீங்கள் சிலவேளை, ஏன் அரிசியை எண்ணி கணக்கிட முடியாதா என்று கேட்கலாம். சிலர் ஒரு கொத்து அரிசியில் எத்தனை அரிசிகள்? என்று பகிடியாக கேட்பதையும் நாம் பார்த்துள்ளோம். உண்மையில் அரிசி, சோறு, சீனி போன்றவற்றை ஒரு பேச்சுக்காக எண்ணி கணக்கிட முடியும் என்று நாம் கூறினாலும், அவற்றை எண்களால் எண்ணி பயன்படுத்துவதில்லை. காரணம் அவை நமது பார்வைக்கு மிகவும் சிறியதாக இருப்பதனால் மொழி அடிப்படையில் அவற்றை அளவுகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. (இன்றைய விஞ்ஞான உலகிலோ தூசு, துகள்களைக் கூட கணக்கிடக்கூடிய தொழில் நுற்பச் சாதனங்கள் தோன்றிவிட்டன என்பது வேறு விடயம்.)

    கவனிக்கவும்:

    1. கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக ஓர், ஒரு (a/ an) போன்ற சுட்டிடைச்சொற்கள் பயன்படுவதில்லை. (They do not take a/an before them.)

    2.
    ஒன்று இரண்டு மூன்று போன்ற எண்ணிக்கையை குறிக்கும் சொற்களை கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுக்கு முன்பாகப் பயன்படுத்துவது இல்லை.
    ஆனால் சிலர் எண்ணிக்கைகளாகப் பயன்படுத்துவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். அவற்றை சற்று தெளிவுப் படுத்திக்கொள்வோம்.

    Usually I have two coffees a day.
    சாதாரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பிகள் ஒரு நாளைக்கு.

    இவ்வாக்கியத்தை சற்று அவதானியுங்கள். இங்கேஇரண்டு கோப்பிகள்” (two coffees) எனும் சொல், எண்ணிக்கை அடிப்படையில்இரண்டுஎன பொருள் கொள்வது தவறாகும். அதாவதுஇரண்டு கோப்பைகள் கொள்ளளவிலான கோப்பிஎன்பதையே மேலுள்ள வாக்கியம் குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (Here coffees refers to the number of cups of coffee.)

    இவ்வாக்கியத்தை இவ்வாறு கூறுவதே மிகவும் பொருத்தமானது.

    Usually I have two cups of coffee a day.
    சாதரணமாக நான் அருந்துகிறேன் இரண்டு கோப்பை (அளவிளான) கோப்பி ஒரு நாளைக்கு.

    கேள்விகள் கேட்கும் பொழுது இவ்வாறு கேளுங்கள்.

    Can/Could I have some coffee, please?

    Can/Could I have a cup of coffee, please?

    இதுப்போன்ற கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள் சில சமயங்களில் கணக்கிடக்கூடிய பெயர்ச்சொற்கள் போன்று மயங்கவைப்பதும் உண்டு. இவற்றை அவதானித்துப் பார்ப்பீர்களானால் இவை வகைகளாகவோ, அளவுகளாகவோ, கொள்ளளவுகளாகவோ இருக்கும். எனவே இப்பயன்பாட்டை அறிந்து குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    3. some, any, a little, much
    போன்ற சொற்களையும் கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களுடன் பயன்படுத்தலாம்.

    I have got some money.
    Have you got any rice?
    I have got a little money.
    I haven't got much rice.

    4.
    ஆங்கிலத்தில் சில கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்கள், தமிழ் உற்பட சில மொழிகளில் கணக்கிடக் கூடிய பெயர்ச்சொற்களாக பயன்படுகின்றன. (Some uncountable nouns in English are countable in other languages including Tamil. ) இவை குழப்பமாகவும் இருக்கலாம். இவற்றை நாம் விளக்கமாக அறிந்துக்கொள்வது பயனுள்ளதாகும்.

    Accommodation -
    தங்குமிடம்
    advice -
    அறிவுரை
    baggage –
    பயணப் பொதி/ மூட்டை
    bread -
    வெதுப்பி
    equipment -
    சாதனம்
    furniture -
    தளபாடம்
    garbage -
    குப்பை
    information -
    தகவல்
    knowledge -
    அறிவு
    luggage -
    பயணப் பொதி/ பெட்டி
    money -
    பணம்
    news -
    செய்தி
    progress -
    அபிவிருத்தி
    research -
    மீளாய்வு
    travel -
    பயணம்
    work -
    வேலை

    மேலுள்ள பெயர்ச்சொற்களை நாம் தமிழில் தங்குமிடம்தங்குமிடங்கள், அறிவுரை - அறிவுரைகள், பொதிபொதிகள், வெதுப்பிவெதுப்பிகள், சாதனம்சாதனங்கள், தளபாடம்தளபாடங்கள், குப்பைகுப்பைகள், தகவல்தகவல்கள், அறிவுஅறிவுகள், பொதிபொதிகள், செய்திசெய்திகள், அபிவிருத்திஅபிவிருத்திகள், மீளாய்வுமீளாய்வுகள், பயணம்பயணங்கள், வேலைவேலைகள் என்று ஒருமையாகவும் பன்மையாகவும் (அதாவது கணக்கிடு பெயர்ச்சொற்களாக) பயன்படுத்துகின்றோம். ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு பயன்படுத்துவதில்லை; மாறாக கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களாகவே பயன்படுத்துகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    இந்த கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களை பன்மையாக வெளிப்படுத்த வேண்டுமாயின் ஆங்கில மொழியில் அவற்றின் அளவை, பாகத்தை, கொள்ளளவை கணக்கிட்டுக் கூறவேண்டும். இங்கே எடுத்துக்காட்டாக அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள் சில:

    accommodation - a place to stay
    advice - a piece of advice
    baggage
    - a piece of baggage
    bread - a slice of bread, a loaf of bread
    equipment - a piece of equipment
    furniture
    - a piece of furniture
    garbage - a piece of garbage
    information
    - a piece of information
    knowledge - a fact
    luggage - a piece of luggage, a bag, a suitcase
    money - a note, a coin
    news - a piece of news
    research
    - a piece of research, a research project
    travel - a journey, a trip
    work
    - a job, a position

    சரி! இனி உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.

    ஏனைய பெயர்ச்சொற்களின் அட்டவணைகளை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக