Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூலை, 2019

பறவைகள் பலவிதம் – Part 2


puck24558x181

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





கடற்பறவை அல்பெட் ராஸ் அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் “பாராகீத்” என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது. என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது. அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது. ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை. ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே வழி காட்டி செல்லும். தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50 – 50)
அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன். எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.
பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) “கிம் ஜோங் இல்” தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக