இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகம் முழுவதும் நிலவுரிமை
மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடிய 164 பேர் கடந்த 2018-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக
குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கடந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச அமைப்பு கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது.
சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானப் பணிகள், வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவங்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாக களத்தில் போராடியவர்கள்,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றது.

குளோபல் விட்னஸ் அமைப்பு இந்த
2018-ம் ஆண்டு ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டில்
உலகம் முழுவதும் 19 நாடுகளில் மொத்தமாக 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது வாரத்திற்கு
3 பேர் என்ற கணக்காகும்.
அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 பேர், கொலம்பியாவில் 24 பேர், இந்தியாவில் 23 பேர், பிரேசிலில் 20 பேர், கவுதமாலாவில் 16 பேர், மெக்சிகோவில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக கொல்லப்பட்ட 164 பேரில் 43 பேர் சுரங்கப்பணிகளை எதிர்த்துப் போராடியவர்கள் என்றும் 40 பேரை அரசாங்கங்களே கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொல்லப்பட்ட 23 பேர் பட்டியலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியபோது தமிழக அரசின் காவல்துறையால் கொல்லப்பட்ட 13பேரும் சட்டவிரோத தாதுமணல் கொள்ளையை தடுக்க முயன்று நெல்லை மாவட்டம் பரப்பாடியில் கொல்லப்பட்ட காவலர் ஜெகதீசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும்
இந்தப் பிரச்னைகளின் தடுப்பதற்காக எந்த முனைப்பும் காட்டாமல் இருப்பதாகவும் தனியார்
நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிதியுதவி அளிக்கும் சர்வதேச வங்கிகள்
கூட இக்கொலைகள் குறித்து அக்கறை இல்லாமல் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறது குளோபல்
விட்னஸ் அமைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக