இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உள்ளூர் T20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விக்கெட் கீப்பர் ரன் அவுட் செய்வதற்காக வேகமாக எறிந்த பந்து பவுலரின் மீது பட்டு அவர் வலியால் அங்கும் இங்கும் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் நாட்டில் Vitality Blast T20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்ஷயர்-டர்ஹாம் அணிகள் ஒரு ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் டர்ஹாம் அணி பேட்டிங் செய்தபோது அந்தணியின் துடுப்பாட்ட வீரர் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் மஹாராஜா வீசிய பந்தை லெக் திசையில் அடித்து ஆட முயற்சித்தார்.
பந்து
காலில் பட்டதால் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடினர். அப்போது ரன் அவுட் செய்வதற்காக
யார்ஷயர் அணியின் விக்கெட் கீப்பர் பந்தை வேகமாக எடுத்து பவுலர் இருக்கும் திசையை
நோக்கி வீசினர். ஆனால், பந்து ஸ்டெம்பில் படாமல் பவுலரை பலமாக தாக்கியது.
பந்து தாக்கிய வேகத்தில் யார்ஷயர் அணியின் பவுலர் வலியால்
துடித்து போனார். மேலும், அந்த வலியில் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம்
அங்கும் இங்கும் ஓடினார். இதுகுறித்த வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி
வைரலாகிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக