இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வடமொழியில் விருக்க்ஷம் என்றால்
'மரம்' என்று பொருள். இந்த ஆசனம் பார்ப்பதற்கு மரத்தை போன்று இருப்பதால் இதற்கு
விருக்ஷாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். (அதாவது மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்க வேண்டும்).
- பின், வலது காலை மடித்து இடது தொடையின் உள்பக்கமாக வைக்கவேண்டும். அதாவது குதிகால் மேல்நோக்கியும், கால் விரல்கள் தரையை பார்த்தவாறும் இருக்க வேண்டும்.
- பின்னர், மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தூக்கி தலைக்கு மேல் உள்ளங்கைகளை சேர்த்து வணக்கம் தெரிவிப்பது போல் வைக்க வேண்டும்.
- இப்பொழுது மூச்சை வெளிவிடவும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் ஆடாமல், அசையாமல் சுமார் ஐந்து சுவாசங்கள் இருக்கவும்.
- பின் மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளையும், காலையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
- இதே போல் காலை மாற்றி செய்ய வேண்டும்.
பலன்கள்:
- கால்களும், தோள்களும் வலிமை பெறுகிறது.
- மார்பு பகுதி நன்றாக விரிவடைவதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். மனதை ஒருநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.
- வாத நோய், மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- குறிப்பு: ( முதலில் இந்த ஆசனத்தை செய்யும் பொழுது தடுமாற்றம் ஏற்படும். எனவே முதலில் சுவரின் உதவியுடன் செய்து பழகிய பின் தனியாக நின்று பயிற்சி பெறவும். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக