>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 22 ஆகஸ்ட், 2019

    அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோவில்- நாமக்கல்

     Image result for அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்- நாமக்கல்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

      பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோவிலில் உள்ளனர்.

    மூலவர்  : பிடாரி செல்லாண்டியம்மன்

    பழமை  : 500-1000 வருடங்களுக்கு முன்

    ஊர்  : ஒருவந்தூர்

    மாவட்டம் : நாமக்கல்

    மாநிலம் : தமிழ்நாடு

    தல வரலாறு :

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மற்றும் இதன் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை அங்கு வசிக்கும் ஊர் மக்கள் அந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதியது. பின் அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.

    எந்த தவமும் செய்யாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் அந்த சுற்றுப்புற மக்கள். பின் அம்பாளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். இவ்விடத்திலேயே 'பிடாரி செல்லாண்டி" என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை. காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோவில் உருவானது.

    தல பெருமை :

     இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    சிவனுக்கு ரிஷபமே வாகனம். ஆனால், இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம்.

    சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் ரூபமே செல்லாண்டியம்மன் ஆகும். செல்லாண்டியம்மன் வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இவ்வூர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது மக்களின் நம்பிக்கை.

    சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோவிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் தென்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.

    பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கி பயனடைகிறார்கள்.

    மாசிமகத்தை ஒட்டி தேரோட்டம் உள்பட 15 நாள் திருவிழாவும், மார்கழியில் வேல்திருவிழாவும் நடைபெறும்.

    பிராத்தனை :

    திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்க இத்தல அம்மனை பிரார்த்தித்து நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்யலாம்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக