Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

ராணியின் வளையலை எடுத்தது யார்?

Image result for ராணியின் வளையலை எடுத்தது யார்?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

குழந்தைகள் மற்றவர்களுடன் அங்கும் இங்கும் ஆடிப்பாடி விளையாடுவதால் அவர்களிடம் இருக்கும் மந்ததன்மை நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றான ராணியின் வளையலை எடுத்தது யார் என்ற விளையாட்டை பற்றி இன்று பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

10 முதல் 12 குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

முதலில் ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக் கொண்டு அதைப் பத்து சிறு சிறு துண்டுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த துண்டு காகிதத்தில் ராஜா, ராணி, அமைச்சர், கணக்காளர், தலைமைக் காவலர், காவலர், திருடன், மந்திரி என்று எழுதிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளில் இந்த பொறுப்புகளில் உள்ளவர்களைத் தவிர, மீதமுள்ளவர்களை காவலர்கள் என்று துண்டுச் சீட்டில் எழுதிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எழுதிய துண்டுச்சீட்டை குழந்தைகள் உட்கார்ந்து இருக்கும் இடத்தின் நடுவில் யாராவது ஒருவர் குலுக்கிப் போட வேண்டும்.

அதன்பின் விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு சீட்டை எடுத்துக் கொண்டு, அதில் எழுதி இருக்கும் பெயரை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ராஜா என்று எழுதப்பட்டிருந்த சீட்டு யாருக்கு வந்துள்ளதோ அவர், 'நேற்றிலிருந்து ராணியின் வளையலை காணவில்லை... உடனடியாக கண்டுபிடித்து தாருங்கள்" என்று சொல்ல வேண்டும்.

அதேபோல் தலைமைக் காவலர் என்ற, சீட்டை வைத்திருக்கும் நபர் மீதமுள்ள நபர்களில் திருடன் சீட்டு வைத்து நபரை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு கண்டுபிடிக்கும்போது தலைமைக் காவலர், காவலராக இருக்கும் நபரை திருடன் என்று கூறி விட்டால் அவருக்கு இன்னொரு வாய்ப்புகள் வழங்கப்படும். அதற்குள் சரியான திருடனை கண்டுபிடிக்க வேண்டும்.

தலைமைக்காவாலர் சரியான திருடனை கண்டுபிடித்து விட்டால் அவருக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதுபோல் தவறாக கூறினால் 'பூஜ்ஜியம்" மதிப்பெண் வழங்கப்படும்.

பிறகு கணக்காளர் சீட்டு யாரிடம் உள்ளதோ, அவர் ஒரு வெள்ளைத்தாளில் ராஜா-500, ராணி-400, அமைச்சர்-300, கணக்காளர்-200, காவல் உதவியாளர்களுக்கு 100 என்ற அடிப்படையில் மதிப்பெண்களை குறித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, மீண்டும் இந்த துண்டு சீட்டை மடித்து விளையாட வேண்டும்.

ஆட்டத்தின் முடிவில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பெற்றிருக்கும் மதிப்பெண்களை கூட்ட வேண்டும். இந்த மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வெற்றியாளர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக