செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஸ்பெஷல் தயிர் பிரெட்

.Image result for ஸ்பெஷல் தயிர் ப்ரெட்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அனைத்து சத்துக்களும் நிறைந்த ஸ்பெஷல் தயிர் பிரெட்

தேவையான பொருள்கள்:
 • பிரெட் துண்டுகள் 12 
 • தயிர் 1 பெரிய கப்
 • பெரிய வெங்காயம் 2 
 • சீரகம் 2 சிறிய ஸ்பூன்
 • மிளகாய்த் தூள் 2 சிறிய ஸ்பூன்
 • கொத்துமல்லி 1 சிறிய கட்டு
 • நெய்/ சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 6 சிறிய ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு 

செய்முறை:
 • வெங்காயத்தை தோல் உரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி கட்டை ஆய்ந்து, கழுவி அதையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சீரகத்தை கூட முன்பே பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு தோசைக் கல்லில் ப்ரெட் துண்டுகளை நெய் அல்லது எண்ணெய் விட்டு ரோஸ்ட் போடவும்.
 • இப்போது ரோஸ்ட் போட்ட துண்டுகளை ஒரு தட்டின் மேல் பக்கவாட்டில் அடுக்கவும்.
 • தயிரில் தேவையான அளவு உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
 • அவ்வாறு மேற்கண்ட பொருள்களை தயிரில் கலக்கிய மாத்திரத்தில் அந்தத் தயிரை அடுக்கிய ப்ரெட் துண்டுகளின் மேல் நன்கு பரப்பவும். (இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் எப்போது பரிமாறப் போகின்றீர்களா அப்போது தான் சில மணித் துளிகளுக்கு முன் தயிரை பிரெட் துண்டுகளின் மீது ஊற்ற வேண்டும். ஒருவேளை பல மணி நேரத்திற்கு முன்னமே நீங்கள் பிரெட்டின் மீது தயிரை ஊற்றினால் பிரெட் கொச, கொச என்று ஆகிவிடும். பார்க்க நன்றாக  இருக்காது)
 • பின்னர் அதன் மேல், மிளகாய்த் தூள், சீரகத் தூள் ஆகிய இவற்றை எங்கும் பரவும் படியாகத் தூவிப் பரிமாறவும்.
 • இதோ இப்போது சுவையான தயிர் பிரெட் ரெடி.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்