Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 ஆகஸ்ட், 2019

யார் இந்த மார்க் ஜுக்கர்பெர்க்?

Image result for யார் இந்த மார்க் ஜுக்கர்பெர்க்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது.

முன்னொரு காலத்தில் பெண்கள் தலைகுனிந்து தான் நடக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கேற்ப இன்று பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட தலைகுனிந்தே செல்கின்றனர். இதற்கு காரணம் ஸ்மார்ட்போன்கள்.

நம்மிடம் உள்ள தகவல்கள், நம்மை கவர்ந்திழுத்த வாசகங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எதுவாயினும் அதை மற்றவர்களுக்கும் பகிர நினைக்கின்றோம். அப்படி மற்றவர்களுக்கு பகிர உருவாக்கப்பட்ட செயலிகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் செயலி.

இந்த செயலியின் மூலம்; தகவல்கள் பரிமாறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படம் அல்லது வீடியோக்களை போஸ்ட்  செய்து விட்டு எத்தனை லைக்ஸ்  வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அதிக லைக்ஸ் வாங்குபவர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த செயலி மூலம் முகம் தெரியாத நபர்கள்கூட நண்பர்களாகின்றனர். இதனால் நட்பு வட்டம் அதிகரிக்கிறது.

இதில் ஒரு அவசர தகவலை Share செய்யும்போது ஃபேஸ்புக்-ல் உள்ள அனைவருக்கும் காண்பிக்கப்படுகிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். இப்படி அனைவருக்கும் பயன்படும் ஃபேஸ்புக் செயலியை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்.
சமூக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பற்றி இனி காண்போம்.

இவர் மே 14ம் தேதி, 1984ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே கணினி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் சிறுவயதிலிருந்தே Programming எழுத ஆரம்பித்தார். இதற்கு இவரது தந்தை மிகுந்த ஊக்கமளித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் கேட்கும் கேள்விகளுக்கு அவரது தந்தையால் பதிலளிக்க முடியாத காரணத்தால், கணினி ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து அவருக்கு Programme-களை கற்றுத்தரச் செய்தார். இவர் கேட்கும் கேள்விகளுக்கு அந்த கணினி ஆசிரியரால் கூட பதிலளிக்க முடியவில்லை. அவ்வளவு அறிவுக்கூர்மை பெற்றவராக இருந்தார், மார்க் ஜுக்கர்பெர்க்.

தனது 12வது வயதில் Programme ஒன்றை உருவாக்கினார். அதற்கு  Z net Messenger என்று பெயர் வைத்தார். இதை அவரும், அவரது தந்தையும் அலுவலக உரையாடலுக்கு மட்டுமே பயன்படுத்தினர்.

கணினியில் கேம்  விளையாட வேண்டிய வயதில், மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு கேம்-யே உருவாக்கினார்.

மார்க் ஜுக்கர்பெர்க் ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் திறமைமிக்க மாணவனாக திகழ்ந்தார். அதனால் அவர் Programme மேதை என்றும் அழைக்கப்பட்டார். அங்கு ஃபேஸ்புக் என்ற ஒரு புத்தகம் இருந்தது. அதில் அனைத்து மாணவர்களின் புகைப்படங்களும், விபரங்களும் இருந்தது.

அதில் புதியதோர் சிந்தனை செய்து Facemash என்ற பெயரில் ஒரு வெப்சைட்டை  உருவாக்கினார். அதில் 2 நபர்களின் புகைப்படங்களை வைத்து யார் சிறந்தவர் என்ற கணக்கெடுப்பை நடத்தினார். இதற்கு பெண்களின் புகைப்படங்கள் தேவைப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டை ஹேக்  செய்தார்.

Facemash கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமானது. 2004ல் மார்க் ஜுக்கர்பெர்க் தி  ஃபேஸ்புக் என்ற வெப்சைட்டை உருவாக்கினார். இது முதலில் ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பிரபலமானது. பிறகு அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களிடமும் பிரபலமடைந்தது.

நாட்கள் செல்ல செல்ல இது வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. மார்க் ஜுக்கர்பெர்க் இது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என கவனமாக இருந்தார். அதற்கான முழு முயற்சியிலும் ஈடுபட்டு தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.

அதன்பின் ஃபேஸ்புக்  உருவாக்க முழு கவனத்தை செலுத்தினார். 2005-ஆம் ஆண்டு  தி  ஃபேஸ்புக் என்பதை மாற்றி ஃபேஸ்புக் என பெயரிட்டார்.

2007ஆம் ஆண்டின் இறுதியில் லட்சக்கணக்கான  Business PAge மற்றும் Profile-கள் உருவாகியது. 2011ஆம் ஆண்டில் இந்த வெப்சைட் உலகத்தின் பெரிய வெப்சைட்டாக மாறி இந்த உலகை ஆளத் தொடங்கியது.

இன்று இந்த ஃபேஸ்புக் -ன் மதிப்பு 64 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் கணிப்பொறி உலகத்தின் மேதையாக கருதப்பட்டார்.

ஃபேஸ்புக் வெப்சைட்டை உருவாக்கிய போது மார்க் ஜுக்கர்பெர்க்-ன் வயது 19. இந்த சிறிய வயதில் உலகத்தில் உள்ள அனைவரையும் இன்டர்நெட்டில் ஒன்று சேர்த்துவிட்டார், மார்க் ஜுக்கர்பெர்க்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உலகப் பணக்காரர்களின் வரிசையில், பங்குச்சந்தையின் முடிசூடா மன்னனான வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

திருமணம் :

மார்க் ஜூக்கர்பெர்க், பிரிஸ்சில்லா சான் என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்சில்லா சான் ஆகியோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதமான பங்குகளை மனித நலனுக்காக தர்மம் செய்ய இருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி உறுதிமொழி வழங்கியுள்ளார்கள்.

99 சதவீத பங்குகளின் பெறுமதி 45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இந்திய ரூபாய்களில் கிட்டத்தட்ட 3 இலட்சம் கோடி ருபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹார்வெர்டு பல்கலைக்கழகம் :

உலகின் பணக்காரர்களில் ஒருவரான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், 2004ஆம் ஆண்டு பேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்ததால் ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே பல்கலைக்கழகம், சட்டத்துறைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

வருமானம் :

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் விளம்பரங்கள் மூலம் வருகிறது.

உலக பணக்காரர்கள் பட்டியல் :

உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புள ம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும், 2வது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ்-ம் உள்ளனர். இந்த பட்டியலில், தொழிலதிபர் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி, 3வது இடத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முன்னேறியுள்ளார். தற்போது மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர்!

சாதிக்க வயது தடையில்லை என்பதை நிரூபித்து காட்டி, இளம் வயதில் கோடீஸ்வரராக முன்னேறியுள்ளார், மார்க் ஜூக்கர்பெர்க்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக