இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய காலங்களில் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் அவர்கள் கல்விக்கே முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். மேலும் பெற்றோர்கள் அவர்களை விளையாடுவதற்கு ஊக்குவிப்பதில்லை என்பது தான் உண்மை.
விளையாட்டு என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு தத்துவமாகவும் இருக்கிறது. ஒரு சில விளையாட்டுகளை விளையாடும்போது நமக்கு உற்சாகம் தருவதோடு மட்டுமில்லாமல் நம்மிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்துகிறது.
குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை எல்லோருடன் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் போது ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று குழந்தைகளுக்கு ஆர்வத்தை தரும் விளையாட்டுகளில் ஒன்றான சங்கிலிக் கட்டு விளையாட்டை பற்றிப் பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடுவது?
20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
விளையாடுவதற்கு முன்பு முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
பிறகு முதல் போட்டியாளர் மைதானத்தின் ஒரு மூலையில் நின்று கொள்ள வேண்டும். மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் மைதானத்தின் வௌ;வேறு பகுதிகளில் கலைந்து நின்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின் விளையாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் 'சங்கிலிக்காரன் விரட்டி வரான், மாட்டைப் புடிச்சு உள்ளே கட்டு..!" என்று சொல்ல வேண்டும். அதன்பின் முதல் போட்டியாளர் அவர்களைத் துரத்திச் செல்ல வேண்டும்.
முதல் போட்டியாளர் யாரைத் தொடுகிறாரோ, அந்த போட்டியாளர் தனது வலது கையை முதல் போட்டியாளரின் இடது கையோடு சங்கிலிபோல் பின்னிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்த பின் இந்த இரு போட்டியாளர்களும் சேர்ந்து மற்ற போட்டியாளர்களைத் துரத்தி சென்று தொட வேண்டும். இரு போட்டியாளர்களும் ஒருவரை குறி வைத்து துரத்திச் செல்ல வேண்டும்.
இந்த இரு போட்டியாளர்கள் யாரைத் தொடுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இவர்களோடு சங்கிலிபோல் கைகளைப் பின்னிக்கொள்ள வேண்டும். இவ்வாறே தொடப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் நீண்ட சங்கிலிப் போல் துரத்திச் சென்று மற்ற போட்டியாளர்களைத் தொட வேண்டும்.
குறிப்பாக சங்கிலி பின்னலில் இருக்கும் முதல் நபரும், கடைசி நபரும் மட்டுமே போட்டியாளர்களைத் தொட்டுவிட்டால் 'அவுட்" ஆகிவிடுவார்கள். இடையில் இருக்கும் நபர் தொட்டு விட்டால் அவுட் இல்லை.
இவ்வாறு இந்த விளையாட்டை விளையாடும் போது சங்கிலி பின்னலில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பிரிந்து விடக்கூடாது மற்றும் தடுமாறி கீழே விழக்கூடாது. எளிதாக போட்டியாளர்களைத் தொடுவதற்கு ஒருவரை குறிவைத்து அவரையைத் துரத்திச் செல்ல வேண்டும்.
பின்பு கடைசி வரைக்கும் எந்த போட்டியாளர் அவுட் ஆகாமல் இருக்கிறாரோ, அவர்தான் இந்த விளையாட்டின் வெற்றியாளர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக