இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பூமியின் தரைப் பரப்பில் நாம்
நிற்கிறோம் நமது காலடிக்குக் கீழே மண், பாறைகள் நிரம்பி இருக்கின்றன. இந்தப்
பரப்புக்கு 'புவி ஓடு' என்று பெயர் (எர்த்ஸ் க்ரஸ்ட் Earth's Crust) இதன் தடிமன்
இடத்துக்கு இடம் வேறுபடும் சுமாராக 24கிலோ மீட்டரில் இருந்து 160 கிலோ மீட்டர் வரை
இருக்கும்.
புவி ஓட்டிற்குக் கீழே, பாறைகள்
உருகிய நிலையில் இருக்கும். இந்த அடுக்கின் பெயர் 'மேன்டில்' (Mantle) பூமியின்
மையப்பகுதி 6,000 டிகிரி செல்சியஸ் (Celsius) வெப்ப நிலையில் இருப்பதால், அதற்கு
மேலே இருக்கும் மேன்டில் அடுக்கில் பாறைகள் உருகி, குழம்பு மாதிரி ஓடிக்
கொண்டிருக்கிறது குழம்பு நிலையில் இருக்கும் பாறைக்கு 'மாக்மா' (Magma) என்று
பெயர்.
இந்தப் பாறைக் குழம்பு, சாம்பல், புகை
ஆகியவற்றுடன் சேர்ந்து, தரைப் பரப்பின் மேல் இருக்கும் ஓட்டை வழியாக வெளியேறும்
இந்தக் கலவைக்கு 'லாவா' (Lava) என்று பெயர் காலப்போக்கில் லாவா, மேடாகப் படிந்து
மலை போன்ற அமைப்பு உருவாகிறது இதைத்தான் எரிமலை (வல்கேனோ Volcano) என்று
சொல்கிறோம்.
எரிமலையின் அடிப்பகுதி, மேன்டில்
பரப்பைத் தொட்டுக் கொண்டு இருக்கும். காலப்போக்கில் எரிமலையின், நடுவில் 'மாக்மா'
வெளியேறுவதற்குக் குழாய் மாதிரியான அமைப்பு (மாக்மா கண்டியூட் Magma Conduit)
உருவாகிவிடும் மேன்டில் அடுக்கில் அழுத்தம் அதிகரிக்கும் போது, சோடா பாட்டிலின்
மூடியை, நுரை தள்ளுவது மாதிரி, மாக்மா கண்டியூட் வழியாக, மாக்மா மேல் நோக்கிப்
பீறிட்டு வழியும்.
மேன்டிலுக்கு மேலே இருக்கிற புவி ஓடு,
பொலபொலவென வலுவில்லாமல் இருந்தால், அந்த இடங்களில் எரிமலைகள் தோன்றும்.
பிற கோள்களிலும் எரிமலைகள்
இருக்கின்றன செவ்வாய் கிரகத்தில் இமயமலையை விட இரண்டு மடங்கு அதிக உயரமான எரிமலை
இருக்கிறது 'ஒலிம்பஸ் மான்ஸ்' (Olympus Mons) என்பது இதன் பெயர் உயரம் 24 கிலோ
மீட்டர்.
பூமியின் நிலப்பரப்பிலும் கடலுக்கு
அடியிலும் எரிமலைகள் இருக்கின்றன அட்லான்டிக் பெருங்கடலின் (Atlantic Ocean)
மத்தியில் இருக்கும், மலைத்தொடர் 'மிட் அட்லான்டிக் ரிட்ஜ்' (Mid Atlantic Ridge)
பெரும்பாலும் எரிமலைகளால் ஆனது உலகின் மிக நீளமான மலைத்தொடர் இது தான்.
தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டில்
'பரிக்யுட்டின்' (Paricutin) அங்கு 'புலிடோ' (Pulido) என்ற விவசாயிக்குச் சொந்தமான
வயல் பகுதி ஒன்று, 1943ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 ஆம் தேதி வரை இருந்தது.
அன்றைய தினம் மதியம் 3 மணி அளவில்
புலிடோ, சோளம் விதைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். திடீர் என இடி
விழுந்த மாதிரி நிலத்தில் ஒரு சத்தம் கேட்டது.
வயலில் இருந்த ஒரு சிறிய குன்றில்
பள்ளம் ஏற்பட்டதை புலிடோ பார்த்தார் சற்று நேரத்தில் வெடிச் சத்தத்துடன், மளமள
என்று புகையும் சாம்பலும் பள்ளத்தில் இருந்து கிளம்ப ஆரம்பித்தது.
அது ஒரே நாளில் 50 மீட்டர்
உயரத்துக்கு வளர்ந்தது விட்டுவிட்டு 9 ஆண்டுகள் வெடித்து 500 மீட்டர் உயர
எரிமலையாக வளர்ந்தது. பூமியில் கடைசியாக வெடித்து வளர்ந்த எரிமலை இது தான்.
'இந்த எரிமலை எனக்குச் சொந்தமானது'
என்று எழுதி வைத்துவிட்டு புலிடோ வெளியேறினார்.
இதை விட பல மடங்கு பயங்கரமான தம்போவா
என்ற எரிமலை கடந்த 1815 ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சம்பவா தீவில் வெடித்தது.
அந்த எரிமலை கக்கிய புகை மண்டலம்
எங்கும் பரவி பூமியில் சூரிய ஒளி விழுவதை தடுக்கத் தொடங்கியது 1,630 ஆண்டுகளுக்கு
பிறகு ஏற்பட்ட பயங்கர எரிமலை வெடிப்பாக இது கருதப்பட்டது.
1812ல் கரீபியன் தீவுகளில் உள்ள லா
சோபிராரி எரிமலை, அதே ஆண்டில் இந்தோனேஷியாவின் ஷாங்கி தீவில் உள்ள அவு எரிமலை,
1813ல் ஜப்பானில் உள்ள சுவனோசெஜிமா எரிமலை, 1814ல் பிலிப்பைன்ஸில் உள்ள மேயன்
எரிமலை ஆகியவையும் சீற்றத்துடன் வெடித்து நெருப்புக் குழம்பை கக்கின.
ஏற்கனவே இந்த எரிமலைகள்
வளிமண்டலத்தில் புகை மண்டலத்தை ஏற்படுத்திய நிலையில், தம்போவா வெடித்ததில் உலகின்
தட்பவெப்ப சுழற்சியே நிலைகுலைந்து போனது எரிமலை புகையில் இருக்கும் கந்தக அமில
துளிகள் (நீர்த்துளியைவிட நுண்ணியவை) சூரிய ஒளியை தடுத்தன
சூரிய வெப்பம் குறைந்ததால் பூமியில்
குளிர் அதிகரித்தது காற்று மண்டலத்தின் மேல்பகுதியில் உருவான சல்பர்
கூட்டுப்பொருட்களான ஏரோசால் போன்றவை 4 ஆண்டுகள் வரை நிலைத்திருந்து தனது பயங்கர
விளைவை பூமியில் காட்டின சூரிய ஒளியின்றி பயிர்கள் கருகின உணவின்றி உயிரினங்கள்
மடிந்தன பஞ்சம், பட்டினி போல கொள்ளை நோய்களும் வேகமாகப் பரவின.
தட்பவெப்பத்தில் ஏற்பட்ட கோளாறு
வடகிழக்கு அமெரிக்கா, கனடா, வடக்கு ஐரோப்பா, இத்தாலி, சீனா, ஜப்பான் என உலகின் பல
பகுதிகளையும் பாதித்தது. பகல், இரவு என இரு வேளையும் சராசரியாக 20 & 25
டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது
பல இடங்களில் கோடையிலும் பனி கொட்டிய
அதிசயம் நடந்தது வளிமண்டலத்தில் இருந்த எரிமலை புகை மேகத்தில் கரைந்து இத்தாலியில்
ரத்தச் சிகப்பு நிறத்தில் உறைபனி பொழிந்தது
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட
நாடுகளில் கோடை காலமே வரவில்லை வெயிலே அடிக்காமல் காலம்மாறி பெய்த மழை இந்தியாவின்
கங்கை கரை பகுதிகளில் காலரா போன்ற கொள்ளை நோய்களை ஏற்படுத்தி லட்சக்கணக்கான
உயிர்களை பறித்தது.
அதற்குப் பிறகு, அங்கொன்றும்
இங்கொன்றுமாக சில எரிமலைகள் சீறினாலும் 19ம் நூற்றாண்டு போல பாதிப்புகளை
ஏற்படுத்தவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக