இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உட்கடம் என்றால் மாபெரும் 'சக்தி
வாய்ந்த' என்று பொருள். அதாவது இந்த ஆசனமானது உடலுக்கு மாபெரும் சக்தியை தருவதால்
இதற்கு உட்கடாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் மேலே கூறியுள்ளவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
- பின்னர் கால்களை ஒரு அடி அகலத்துக்கு அகட்டி வைத்து நேராக நிற்கவும்.
- இப்பொழுது மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்க வேண்டும். உள்ளங்கைகளானது வணக்கம் தெரிவிப்பது போன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
- முழங்கையானது வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு மூச்சை வெளிவிட்டபடி முழங்கால்களை மடித்து பாதி உட்கார்ந்த நிலைக்கு வர வேண்டும். அதாவது தொடைகள் தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
- இந்த நிலையில் உடலை முன்புறமோ, பின்புறமோ சாய்க்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது அரை நிமிடங்கள் இருந்துவிட்டு பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இயல்பு நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்:
- அதிகப்படியான அடிவயிற்று தசைகள் கரைந்துவிடும்.
- கால் சதைகளுக்கு சிறந்த பயிற்சி கிடைப்பதால் நன்கு வலுப்பெறுகிறது.
- கால் மூட்டு வீக்கம், அலர்ஜி போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
- முதுகுப்பகுதி நேராகிறது.
- வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்படுவதால் உடலில் இருந்து கழிவுகள் எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது.
- மார்பு பகுதி நன்கு விரிவடைவதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
- தோள்பட்டை, மற்றும் முதுகில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பை போக்க உதவுகிறது.
- ஆசன பயிற்சிகள் செய்ய பழகுவதற்கு முன்னர் உட்கட்டாசனத்தை செய்து பயிற்சி பெற்று பிறகு மற்ற ஆசனங்களை செய்ய பழகுவது நல்லது.
- உட்கட்டாசனமானது மற்ற ஆசனங்களை சுலபமாக செய்வதற்கு ஏதுவாக உடலை வளைந்து கொடுப்பதற்கு சிறந்த பயிற்சி அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக