Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

உஷார்! Google Calendar வழியாக பரவும் விபரீதமான Spam Invitations; தடுப்பது எப்படி?

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

கூகுள் காலண்டர் வழியாக வரும் இந்த ஸ்பேம்களால் உங்களின் வங்கி அட்டை விவரங்களை சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்பேமர்கள் எதையும் விட்டு வைக்க மாட்டார்கள் போலும். சமீபத்தில், ஸ்பேமர்கள் கூகுள் காலண்டர் வழியாக தங்களது "கைவரிசையை" காட்டியது அதன் பயனர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியது. கூகுள் காலண்டரில் உள்ள ஒரு எளிமையான Default setting-ஐ நீங்கள் நிகழ்த்தாத பட்சத்தில், உங்களது Schedule-ல் விளம்பரம் மாதிரியான Invitation-களை நீங்களும் பெற்று இருக்கலாம்.

இம்மாதிரியான ஸ்பேம் விளம்பரங்கள் ஆனது தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளால் கூட நிரப்பப்பட்டு இருக்கலாம். அவற்றை கிளிக் செய்வதன் மூலம் உங்களின் தனிப்பட்ட டேட்டா திருடப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

 
சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்ட இந்த கூகுள் காலண்டர் ஸ்பேம் ஆனது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இம்மாதிரியானதொரு சூழ்நிலையில், கூகுள் காலண்டரின் வழியாக உங்களுக்கு வரும் அனைத்து ஸ்பேமிலிருந்தும் விடுபட உதவும் தந்திரத்தை உங்களிடம் சமயம் தமிழ் பகிர விரும்புகிறது.




1) உங்களுக்கு வரும் ஸ்பேம்களை தடுக்க Default ஆக On செய்யப்பட்டு இருக்கும் ஒரு விருப்பத்தை நீங்கள் Disable செய்ய வேண்டும். அதை நிகழ்த்த பின்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்.

- Google Calendar-ன் மேலே உள்ள Gear button-ஐ கிளிக் செய்யவும்.

- அதில் Settings விருப்பத்தை தேர்ந்து எடுக்கவும்.

- இப்போது இடது பக்கம் காட்சிப்படும் பட்டியலில் இருந்து Event Settings-ஐ தேர்ந்து எடுக்கவும்.

- அங்கு Automatically add invitations என்கிற விருப்பம் Enable செய்யப்பட்டு இருப்பதை காண்பீர்கள். இதை நீங்கள் மாற்றியாக வேண்டும்.

- இப்போது பட்டியலில் உள்ள “No, only show invitations to which I have responded" என்கிற விருப்பத்தை தேர்ந்து எடுக்கவும். அவ்வளவுதான்!

இதை செய்து முடிக்கவும், குறிப்பிட்ட மீட்டிங்கிற்கான இன்விடேஷனை நீங்கள் ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது கூகுள் காலண்டரில் Add ஆகும். அதாவது எந்த விதமான automatic additions-களும் இருக்காது என்று அர்த்தம். இது உங்கள் கூகுள் காலண்டரை சுத்தமாகவும் ஸ்பேம் இல்லாததாகவும் வைத்திருக்க அனுமதிக்கும்.

 
2) இப்போது, ஜிமெயில் ஆனது அனைத்து Event-களையும் உங்கள் காலண்டருக்கு அனுப்புவதை பயனர்கள் நிறுத்த வேண்டும். அதை நிகழ்த்த பின்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்.

- இடது பக்கம் உள்ள மெனுவில் ‘Events from Gmail' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இப்போது ‘Automatically add events from Gmail to my calendar' என்கிற விருப்பத்தை டிசெலெக்ட் செய்யவும்.

- இப்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அது ‘You'll no longer see events automatically added from your email. Previously added events from Gmail will be removed' என்று கூறும். இப்போது Okay என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்!

 
3) முன்னதாக உங்களுக்கு வந்த Spam invitations-களை களைவதும் நல்லதே. அதை செய்ய இடது பக்க மெனுவில் உள்ள Event Settings-ஐ கிளிக் செய்து View options செக்ஷனுக்குள் நுழையவும். Show declined events என்கிற விருப்பத்தை டிசெலெக்ட் செய்யவும். அவ்வளவுதான்!

வங்கி அட்டை விவரம் முதல் போலி வாக்கெடுப்பு வரை!

சமீபத்தில் வெளியான காஸ்பர்ஸ்கி ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி, கூகுள் காலண்டர் ஸ்பேம் வழியாக ஃபிஷிங் இணைப்புகளை பயன்படுத்துவதன் மூலம், நெறிமுறையற்ற ஸ்பேமர்கள் உங்கள் வங்கி அட்டை விவரங்களைப் பெற முயற்சிக்கிறார்கள். உடன் கூகுள் காலண்டரை பயன்படுத்தி போலி வாக்கெடுப்புகளும் நடக்கிறது, அதற்காக வெகுமதியும் வழங்கப்படுகிறது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக