>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 28 ஆகஸ்ட், 2019

    ஆங்கில "வாதங்கள்" (Suffix "isms")


    Image result for Suffix "isms"

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    நாம் கடந்தப் பாடத்தில் ஆங்கிலப் பின்னொட்டுகளின் அட்டவணையைப் பார்த்தோம். அதில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் பாடங்களில் எதிர்பார்க்கலாம் என அறியத்தந்திருந்தேன். அதன்படி இன்றையப் பாடத்தில் "ism" என்ற எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் 50 சொற்களைப் பார்ப்போம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த "ism" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் சொற்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. இச்சொற்கள் அநேகமாக பெயர்ச்சொற்களாகவே இருக்கும்.

    புதிதாக இந்த ஆங்கிலம் தளத்திற்கு வருகைத்தந்துள்ளோர் தயவுசெய்து முதலாம் பாடத்தில் இருந்து தொடங்கவும்.

    உங்களிடம் யாராவது ஆங்கிலத்தில் "isms" சொற்கள் எத்தனை தெரியும் என்றால், ஆகக்குறைந்தது ஒரு 50 சொற்களாவது அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா!

    அப்படியானால் இவற்றைப் பாடமாக்கிக் கொள்ளுங்கள்.

    No:
    English Terms
    கலைச்சொல்லாக்கம்
    1.
    Aestheticism
    அழகியல்வாதம்

    2.
    Absolutism
    தனியாட்சிவாதம்

    3.
    Antirealism
    மெய்ம்மைமறுப்பு வாதம்

    4.
    Antitheism
    இறைமறுப்புவாதம்

    5.
    Atheism
    இறைமறுவாதம்/நாத்திகம்

    6.
    Behaviorism
    நடத்தைநெறிவாதம்

    7.
    Capitalism
    மூலதனவாதம்-முதலாளித்துவம்

    8.
    Classism
    வகுப்புவாதம்/செந்நெறிவாதம்

    9.
    Communism
    பொதுவுடைமைவாதம்

    10.
    Communitarianism
    சமூகத்துவவாதம்

    11.
    Confederalism
    கூட்டாண்மைவாதம்

    12.
    Conservatism
    பழமைப்பேண்வாதம்

    13.
    Constructivism
    கட்டமைப்புவாதம்

    14.
    Conventionalism
    உடன்பாட்டுவாதம்

    15.
    Determinism
    துணிபுவாதம்

    16.
    Dogmatism
    பிடிவாதம்

    17.
    Dynamism
    இயக்கவாதம்

    18.
    Egoism
    தன்னலவாதம்

    19.
    Empiricism
    புலனறிவாதம்

    20.
    Existentialism
    இருப்பியல்வாதம்

    21.
    Extremism
    தீவிரவாதம்

    22.
    Fascism
    கொடுந்தேசியவாதம்/ பாசிசம்

    23.
    Fundamentalism
    மூலநெறிவாதம்

    24.
    Hinduism
    இந்துத்தவவாதம்

    25.
    Idealism
    இலட்சியவாதம்/ கருத்தியல்வாதம்

    26.
    Individualism
    தனிமனிதவாதம்

    27.
    Islamism
    இஸ்மாயியவாதம்

    28.
    Legalism
    சட்டநெறிவாதம்

    29.
    Libertarianism
    சுதந்திரவாதம்

    30.
    Marxism
    மார்க்கசியவாதம்/ மார்க்கசியம்

    31.
    Modernism
    நவீனத்துவம்

    32.
    Monotheism
    தனியிறைவாதம்

    33.
    Naturalism
    இயற்கைவாதம்

    34.
    Objectivism
    புறவயவாதம்

    35.
    Pluralism
    பன்மைத்துவம்

    36.
    Polytheism
    பல்லிறைவாதம்

    37.
    Racial chauvinism
    பேரினவாதம்

    38.
    Racism
    இனவாதம்

    39.
    Realism
    மெய்ம்மைவாதம்/ மெய்ம்மை

    40.
    Materialism
    பொருள்முதல்வாதம்

    41.
    Nazism
    கொடும்பேரினவாதம்/நாசிசம்

    42.
    Neutralism
    நடுநிலைவாதம்

    43.
    Realism
    யதார்த்தவாதம்

    44.
    Skepticism
    ஐயவாதம்

    45.
    Socialism
    சமூகவுடைமைவாதம்

    46.
    Stoicism
    உள்ளொடுக்கவாதம்

    47.
    State terrorism
    அரச பயங்கரவாதம்

    48.
    Terrorism
    பயங்கரவாதம்

    49.
    Theism
    இறைவாதம்/ ஆத்திகம்

    50.
    Utilitarianism
    பயன்பாட்டுவாதம்


    விளக்கம்

    "ism" எனும் பின்னொட்டு, ஒரு சொல்லுடன் இணைந்து பயன்படும் போது மூலச்சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு, புதியப் பொருள் தரும் வேறொரு சொல்லாக பரிணமிக்கிறது. ஆனாலும் மூலச்சொல்லுடன் தொடர்புடைய வகையிலேயே அந்த புதியச் சொல்லின் பொருள் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக "ism" எனும் பின்னொட்டின் பயன்பாடு ஒன்றின் "கொள்கை" என்பது போன்ற விளக்கத்தைக் கொண்டிருந்தாலும், அது பல்வேறு உட்பொருள்களையும் வெளிபடுத்தும் வகையிலேயே அமைகின்றன. எடுத்துக்காட்டாக "Hindu" என்றால் "இந்து" மதத்தைக் குறிக்கும் சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேவேளை இந்து மதம் கொண்டுள்ள நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள், மூடக்கருத்துக்கள், சிறப்பியல்புகள் என அனைத்தையும் ஒருமித்த வகையில் "இந்துத்தவவாதம்" எனப்படும். அதனையே ஆங்கிலத்தில் "Hinduism" என்றழைக்கபடுகிறது. அதேபோன்றே Islamism, Christianism, Buddhism போன்றவைகளும் இஸ்லாமியவாதம், கிருஸ்தவவாதம், பௌத்தவாதம் என பொருள்படுகின்றன.

    இன்னொரு விளக்கத்தையும் பாருங்கள். "America" என்றால் "அமெரிக்கா" எனும் நாட்டை குறிக்கும் சொல். அதேவேளை அமெரிக்கா (அரசு மற்றும் மக்கள்) கொண்டுள்ள கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் போன்ற அனைத்துமே "அமெரிக்கவாதம்" எனப்படும். அதனை ஆங்கிலத்தில் "Americanism" என்றழைக்கப்படுகிறது.

    இதேபோன்றே ஏனைய "isms" பின்னொட்டுச் சொற்களும் பொருள் கொள்கின்றன என்பதை நீங்களாக உணர்ந்துக்கொள்ளலாம்.

    கவனிக்கவும்

    ism = வாதம் எனும் வகையிலேயே எல்லாசொற்களும் இங்கே வழங்கப்பட்டாலும், தமிழ் மொழியின் வழக்கில் சிலசொற்கள் விதிவிலக்காகவும் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக "Marxism" என்றால் "மார்க்சிசம்" என்று அப்படியே ஒலிப்பெயர்த்து பயனபடுத்துதல் வழக்கில் உள்ளது. அதேபோன்றே "Buddhism" என்றால் பௌத்தவாதம் என்பதைவிட "பௌத்தம்" என சுருக்கமாக அழைக்கும் வழக்கே அதிகம். இன்னும் "Idealism", "Realism" போன்ற சொற்களும் கருத்தியல்வாதம், மெய்மைவாதம் என்பதைவிட "கருத்தியல்", "மெய்மை" என சுருக்கமாக பயன்படுத்துவொரும் உளர்.

    குறிப்பு:

    ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான "isms" பின்னொட்டுக்களைக் கொண்ட சொற்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்திற்கும் தமிழில் கலைச்சொற்கள் இதுவரை உருவாக்கபடவில்லை. இருப்பினும் கனடா தமிழ் சொற்கோவை குழாமினர், ஒரு ஒருங்கிணைந்த முயற்சியுடன் தமிழில் நல்ல கலைச்சொற்களை உருவாக்கும் அரும்பணியொன்றை செய்துவருகின்றனர். அவர்களால் உருவாக்கப்பட்ட "isms" கலைச்சொற்கள் பல இந்த பாடத்தில் நன்றியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருகிறோம்.


    சரி! எனது அன்பு தமிழ் உறவுகளே! இன்றையப் பாடம் சொற்கள் தொடர்பான புரிதலுக்கு உதவும் வகையிலேயே இடப்பட்டுள்ளது. இவை உங்கள் ஆங்கில சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும் உதவும். அத்துடன் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்கள் நிச்சயம் பயன்மிக்கவைகளாக இருக்கும் என்றும் நம்பி விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக