இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பல நூறு வருடங்களாக மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பயணம் செய்த மக்களை முதன் முதலில் பேருந்துகளில் பயணம் செய்ய வைத்த ஒரு நிறுவனம்.
பேருந்தில் ஆரம்பித்து இன்று ஒவ்வொரு மனிதரும் தனக்கென்று ஒரு தனி வாகனத்தை வைத்துக் கொண்டிருக்கும் இதன் தயாரிப்புகள் ஏராளம்.
நமது அப்பா, தாத்தா காலத்திலிருந்தே வண்டிகள் என்றால் இந்த ஒரு கம்பெனியின் பெயர்தான் நம் ஞாபகத்திற்கு வரும்.
இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இதன் தயாரிப்பில் உள்ளன.
இரு சக்கர வாகனங்களில் மொபட் முதல் அதிநவீன பைக்குகள் வரை இந்த கம்பெனி தனது தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலகத்தில் மிகச் சிறந்த மோட்டார் கம்பெனிகளில் இதுவும் ஒன்று.
இன்றளவும் கிராமப்புறங்களில் இந்த நிறுவனத்தின் வாகனங்கள்தான் பெருமளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அன்றைய காலக்கட்டத்தில் மாட்டுவண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்த கிராம மக்களை பேருந்தில் பயணம் செய்ய வைத்த ஒரு மனிதர் டீ.வி.சுந்தரம் ஐயங்கார்
இவர் உருவாக்கிய மாபெரும் சாம்ராஜ்ஜியம் தான் வுஏளு மோட்டார்ஸ்.
இவர் மார்ச் 22ஆம் தேதி, 1877ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி என்ற ஊரில் பிறந்தார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை, திருச்சூரின் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மேல்படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். சட்டக்கல்வியில் தனது இளங்கலைப் பட்டத்தை வென்ற இவர், ஒரு வழக்கறிஞராக தனது தொழில்துறையைத் தொடங்கினார். பின்னர் இந்திய ரயில்வேயிலும், அதன் பின் ஒரு வங்கியிலும் வேலை செய்தார்.
தொழில்துறை :
தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்தார். 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்தார். இதில் இவருக்கு 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.
அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912ஆம் ஆண்டு தஞ்சாவூர்-புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். இவர் நிறுவிய 'டி.வி.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்", 'டி.வி.எஸ் குழு" என்ற அமைப்பு உருவாக உதவியது.
அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்கு தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் இருந்தது.
இந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் 'இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்" என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு 'ரசீது வழங்குவது" என்னும் நடைமுறையையும் கொண்டு வந்தவர் டி.வி.எஸ்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, 'குறிப்பிட்ட நேரத்திற்கு இந்தப் பேருந்து புறப்படும்" என்ற நடைமுறையை நாட்டிற்கே டி.வி.எஸ்தான் அறிமுகப்படுத்தினார்.
வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாக செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும், குழியுமான சாலைகளே காரணம் என்பதை அப்போதே உணர்ந்திருந்த டி.வி.சுந்தரம், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டும், குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.
சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்று போயின. இதனை தடுக்க ஒரு காந்த வண்டியை டி.வி.சுந்தரம் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டன. இதனால் டி.வி.எஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.
புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாகனங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பாகங்களையும் சிறிய அளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டி.வி.சுந்தரம் விற்பனை செய்து வந்தார்.
புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தை தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பரந்து விரிந்து நிற்கும் இன்றைய டி.வி.எஸ் நிறுவனத்தின் விதையாகும்.
1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டி.வி.எஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டி.வி.எஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.
இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். அப்போது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் 'டி.வி.எஸ் எரிவாயு ஆலையை" தொடங்கினார்.
ஒரு தனி மனிதனின் பேரார்வத்தால் துவங்கப்பட்ட டி.வி.எஸ் நிறுவனம் ஒரு வளமான குடும்பத் தொழிலாக உருவானது. 'டி.வி.எஸ்" என்ற பெயரின் கீழ் நான்கு தனித்தனி கிளைகள் தொடங்கியது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் விநியோக நிறுவனம் என்ற பெருமை டி.வி.எஸ் குழுமத்தையே சாரும்.
இந்த குழு தானியங்கி பாகங்கள் உற்பத்தி, வாகன விற்பனை, மின்னணு, ஐ.டி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் 40,000 பேரை வேலையில் அமர்த்தி செயல்படுகிறது.
டி.வி.சுந்தரம், தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். மேலும், அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்தினார். ஊழியர் குடியிருப்புகள், அவர்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தார்.
தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். நிர்வாக யோசனைகளில் தொழிலாளர்களைப் பங்கேற்க வைத்தார். தாத்தா, அப்பா, பேரன் - கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற குடும்பங்கள் பல உண்டு.
இளம்வயதிலேயே கைம்பெண்ணான தனது மகளுக்கு, மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார். வணிகத்திலிருந்து தானாக பணி ஓய்வை அறிவித்து, தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவரான ராஜாஜி மிகவும் பாராட்டினார்.
டி.வி.சுந்தரம் அவர்களுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உண்டு. அவர்கள்,
டி.எஸ்.சௌந்தரம்
டி.எஸ்.ராஜம்
டி.எஸ்.துரைசாமி
டி.எஸ்.சந்தானம்
டி.எஸ்.அமு அம்மாள்
டி.எஸ்.ரங்க அம்மா
டி.எஸ்.ஸ்ரீனிவாசன்
டி.எஸ்.கிருஷ்ணா
டி.வி.சுந்தரம் அவர்களுக்கு உதவியாக 5 மகன்களும் தொழிலில் இறங்கினர். இந்தியாவின் 'நிதி தொழிலின் தந்தை" என்று போற்றப்படும் நிறுவனமான 'சுந்தரம் ஃபைனான்ஸ்" நிறுவனத்தை, டி.வி.சுந்தரத்தின் இளைய மகனான டி.எஸ்.சந்தானம் நிறுவினார்.
டி.வி.சுந்தரத்தின் மறைவு :
நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 78வது வயதில், ஏப்ரல் 28ஆம் தேதி 1955ல் கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
டி.வி.எஸ்-ன் அடுத்த பரிணாமம் :
டி.வி.எஸ் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மூன்றாவது இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.
2016-17ல் டி.வி.எஸ்-ன் வருமானம் 13,363 கோடி ரூபாயாகும். ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனம் 3.2 மில்லியன் இருசக்கர வாகனங்களை தயாரிக்கின்றது. அதேபோல் 1,20,000 மூன்று சக்கர வாகனங்களையும் தயாரிக்கின்றது.
டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்களின் மறைவிற்கு பிறகு அவரது மகன்களால் டி.வி.எஸ் நிறுவனம் முன்னேற்றி கொண்டுவரப்பட்டது. அப்போது டி.வி.எஸ்-ன் கீழ் டூவீலர், பைனான்ஸ், இன்சூரன்ஸ், எனர்ஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் கொண்டுவரப்பட்டது.
டி.வி.எஸ் நிறுவனம் 1972ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிளைட்டன் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்தது. பின் சுந்தரம் கிளைட்டன் என்று நிறுவனத்தின் பெயரை மாற்றினர். கிளைட்டன் என்பது பிரேக், கம்ரசர் போன்ற ஆட்டோமொபைல்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். அதன்பிறகு 1978ஆம் ஆண்டு ஒசூரில் இருசக்கர வாகன தயாரிப்பை ஆரம்பித்தனர்.
வேணு ஸ்ரீனிவாஸன் :
டி.வி.சுந்தரம் ஐயங்காரின் பேரனும், டி.எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களின் மகனுமான வேணு ஸ்ரீநிவாஸன் 1979ல் சுந்தரம் கிளைட்டனின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றார். பின், 1980ல் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக பதவி ஏற்றார்.
இவர் தன் பள்ளிப்படிப்பை சென்னை டான் பாஸ்கோ ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். பின் சென்னையில் லயோலா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்தார். பின் அமெரிக்காவின் purdue Universityல் அறிவியல் முதுகலை பட்டத்தை பெற்றார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு மேலாண்மையில் டாக்டரேட் பட்டத்தை வழங்கியது. மேலும் பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகமும், இந்தியாவின் ஐஐடி காரக்பூரும் இவருக்கு அறிவியலில் டாக்டரேட் பட்டத்தை வழங்கியுள்ளது.
டி.வி.எஸ் நிறுவனம்... கடந்து வந்த சவால்கள் :
வேணு ஸ்ரீநிவாஸன் பதவியேற்றப்பின் நிறுவனத்தில் பல புதுமைகளை புகுத்தி அதை உலக தரத்திற்கு மேம்படுத்தினார். மேலும், அதிநவீன இயந்திரங்களை களம் இறக்கி, புதிய தொழில் நுட்பங்களை ஆழமான ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கி நிறுவனத்தை உயர்த்தினார்.
அதன்பிறகு 1980ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் டூவீலரான டி.வி.எஸ் 50-ஐ அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு 1982-ல் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் Suzuki-யுடன் கைக்கோர்த்தது. இவர்களது டிசைன், டெக்னாலஜி அனைத்தையும் Suzuki-யுடன் கலந்து ஆலோசித்து புதிய டெக்னாலஜியில் புதுரக வாகனங்களை 1984ஆம் வருடம் தயாரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக Suzuki Shogun ,Suzuki Samurai போன்ற பல மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்தினர்.
அதன் பிறகு 2001-ல் கருத்துவேறுபாட்டால் 19 வருட நட்பை முறித்துக்கொண்டு Suzuki-யிடமிருந்து பிரிந்து சுந்தரம் கிளைட்டன் எனும் பெயரை, டி.வி.எஸ் என்று மாற்றியமைத்தனர். அதுமட்டுமல்லாமல் 30 மாதங்களுக்கு Suzuki நிறுவனத்தின் எந்த ஒரு தயாரிப்பும் இந்திய சந்தைக்கு வரக்கூடாது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
2001ஆம் ஆண்டிற்கு பிறகுதான் தனது சொந்த பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள பல டி.வி.எஸ் தயாரிப்புகளை வெளியிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட இன்ஜினோடு கூடிய டி.வி.எஸ் விக்டர் எனும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தினார்.
இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஜப்பானிய தர ஆய்வாளர்களை தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு தன்னுடைய மோட்டார் சைக்கிள்களின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். XL100, ஸ்கூட்டி பெப் பிளஸ், வீகோ, ஜுப்பிட்டர், ஸ்போர்ட், அப்பாச்சி, மூன்று சக்கர வாகனங்கள் என பல வாகனங்களை தயார் செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் Race க்காகவும் பல பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. Racing வரலாற்றிலேயே இவர்கள் தயாரித்த பைக்குகள் மட்டும் தான் 90 சதவீத வெற்றியை தருகின்றது.
டி.வி.எஸ் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாயாகும். தற்போது டி.வி.எஸ் நிறுவனம் BMW, G310R மோட்டாரின் டெவலப்பராகவும் இருக்கின்றது.
டி.வி.எஸ் நிறுவனத்திற்கு கிடைத்த விருதுகள் :
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், ஜே.டி.பவர் 2018 இந்தியா இரு சக்கர வாகன வாடிக்கையாளர் சேவை குறியீடு, இரு சக்கர வாகன தொடக்க நிலை தரம் மற்றும் இரு சக்கர வாகன ஆட்டோமோட்டிவ் தயாரிப்பு செயலாக்கம் மற்றும் லேஅவுட் ஆய்வுகளில் கௌரவமிக்க உயர் விருதுகளை வென்றிருக்கிறது.
டி.வி.எஸ்-ன் தயாரிப்புகளில் ஸ்கூட்டர் பிரிவில் டி.வி.எஸ் ஜூப்பிடரும், மோட்டார் சைக்கிள் ப்ரீமியம் பிரிவில் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180-ம், எகானமி மோட்டார் சைக்கிள் பிரிவில் டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி பைக்கும் அந்தந்த தயாரிப்பு வகையினத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன.
விருதுகள் :
2002-ல் குவாலிட்டி மேனேஜ்மெண்டிற்காக 'டெம்மிங்' என்ற விருதை பெற்றனர்.
2002-ல் டி.வி.எஸ் விக்டர் பைக்கிற்காக நேஷனல் விருதை பெற்றனர்.
2004-ல் outstanding design and excellent விருதை டி.வி.எஸ் ஸ்கூட்டியை அறிமுகப்படுத்தியதற்காக பெற்றனர்.
2007-ல் custome excellence ஒரு விருதும், அதே வருடத்தில் Team Teach விருதும் வாங்கினார்கள்.
2008-ல் implementation of Productivity and Maintenance (உற்பத்தித்திறன் மற்றும் பராமரிப்பு செயலாக்கம்) என்ற விருதை ஜப்பான் இன்ஸ்டிடியூட் இவர்களுக்கு வழங்கியது.
2009-ல் Good Advertising என்ற விருதை பெற்றனர்.
1911-ல் ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று முன்னணியில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளுக்கு தனது இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம் டி.வி.எஸ்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக