இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழ் நாட்டு மக்கள் உணவு பிரியர்கள்
என்று கூறலாம். ஒரு உணவகத்தில் உணவு நன்றாக உள்ளது என்றால் அதனை ரசித்துச் சாப்பிடுவது
மட்டும் இல்லாமல் அதனைப் பிறருக்கு பகிர்வது அது தட்டுக் கடையாக இருந்தாலும் அதனைப்
பிரபலப்படுத்துவதில் முக்கியமானவர்கள் என்று கூறலாம்.
அப்படிக் கோவை, சலிவான் வீதியில்
35 வருடமாகத் தொடர்ந்து சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இடியாப்பம், புட்டு
என இரண்டு உணவு வகைகளையும் கடலைக்குழம்பு உடன் அளித்து வருகின்றனர் இந்தச் சந்திரன்,
பாப்பா தம்பதியினர்.
காலை 7 மணி முதல் பிற்பகல்
12 மணி வரை இயங்கும் இந்த இடியாப்ப கடையில் வார இறுதி நாட்களில் மிகப் பெரிய கூட்டமே
இருக்கும். சலிவான் வீதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாக
இந்தக் கடை உள்ளது. சுண்டல் குழம்பு தான் இந்தக் கடை தான் சிறப்பம்சம் என்றும் கூறுகின்றனர்.
கோயம்புத்தூரில்
உள்ளவர்கள் மற்றும் அங்குச் செல்பவர்கள் நேரம் கிடைத்தால் இந்த வயதான தம்பதியினர்
நடத்தி வரும் கடைக்கு ஒரு முறை சென்று வாருங்கள். உணவும், சுவையும் உங்கள்
வாய்விட்டுப் போகாமல் இருக்கும்.
இங்கு
வந்து மன நிறைவுடன் சாப்பிட்டு விட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை
நீங்களே வீடியோவில் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக