இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நமக்குப் பின்னால் நம் குடும்பம்
சொத்துப் பிரச்னையில் சிக்காமல் இருக்க, உயில் எழுதுவது மிக அவசியம். நீதித்துறை
செயல்பாடு களை ஆய்வு செய்யும், ‘தக்ஷ்’ அமைப்பின் அறிக்கை, ‘2016 நிலவரப்படி,
நீதிமன்றங்களில் உள்ள சிவில் வழக்குகளில் 76%, சொத்து மற்றும் குடும்பத் தகராறு
தொடர்பானவை’ என்கிறது.
பணமும் நேரமும்
செலவாகும் என்ற எண்ணத்தால், பலர் உயில் எழுத விரும்பாமல் உள்ளனர். அவர்கள் உயில்
எழுதாமல் விட்டுச் செல்வதால், வாரிசுகளுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்வ தில்லை.
சொத்துகளைச் சுலபமாகவும் விரைவாகவும் வாரிசு களுக்கு மாற்றுவதில் உயில் முக்கியப்
பங்காற்றுகிறது. அப்படிப் பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உயிலை எழுதும்போது கவனிக்க
வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்.
1. சொத்து மற்றும் கடன்
உயில்
எழுதுவதற்குமுன், பல ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த சொத்து, முதலீடு மற்றும் கடன்
ஆகியவற்றின் பட்டியலைத் தயாரிப்பது முக்கியம். அதில், முழுமையான தகவல்கள் இடம்பெற
வேண்டும். தவறினால், அது, உயில் எழுதுவதன் நோக்கத்தைப் பாழாக்கிவிடும்.
துல்லியமான, அதேசமயம் சொத்து நிர்வாகம் குறித்த, வெளிப்படைத்தன்மைக்குத் தனி
ஆவணத்தை உருவாக்கிப் பராமரித்து வரலாம்.
2. பயனாளிகள் பட்டியல்
உயில்
என்பது, யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கிறது என்ற கேள்விக்கே வழியின்றி
செய்துவிடுகிறது. உயிலில் குறிப்பிட்ட படிதான், சொத்துகளைப் பிரித்தளிக்க முடியும்
என்பதால், இது நேரடி வாரிசு களுக்கு மிகவும் முக்கியமானது. பாகப்பிரிவினையின்போது,
மூன்றாம் நபர் தலையீடு அல்லது தேவையற்ற கோரிக்கைகள் எழுவதை அனுமதிக்கக் கூடாது.
இதற்கு, உயில் எழுதும்போது, சொத்து களைப் பிரித்து விநியோகிப்பது தொடர்பான
தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
3. செயல்படுத்துபவர்
உயில்
எழுதுவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல, அதிலுள்ள சாராம்சங்களின் படி,
செயல்படுத்தக்கூடிய பொறுப்புக்குத் தகுதியான வரைத் தேர்வு செய்வதும்
முக்கியமாகும். இதற்கென உள்ள வல்லுநர்களையோ அல்லது மிகவும் நம்பகமான நண்பர் அல்லது
குடும்ப உறுப்பினரையோ உயிலைச் செயல்படுத்தும் பொறுப்புக்கு நியமிக்கலாம்.
4. செல்லத்தக்க உயில்
உயில்
எழுதுவதற்கு எனத் தனியாக எந்தப் படிவமும் கிடையாது. ஆனால், உயில், சட்டப்படி
செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். உயில் எழுதும்முன், சொத்து பிரிப்பில் தெளிவான,
தீர்க்கமான நிலைப்பாடு தேவை. யாருடைய நிர்பந்தமும் இன்றி, தெளிந்த மனநிலையில்
பாகப் பிரிவினை செய்வதாக உயிலில் குறிப்பிட வேண்டும். இரண்டு சாட்சிகள்
முன்னிலையில், உயிலில் கையொப்பமிட வேண்டும்.
5. பாதுகாப்பு
உயில்
எழுதிவிட்டால் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சொத்துரிமை தொடர்பான
விவரங்களைப் பிறரிடம் ஆலோசிக்கவோ அல்லது காட்டவோ கூடாது. உயில் காணாமல் போவதையும்
பாழாவதையும் தடுக்க, அந்த ஆவணத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம். திட்டமிட்டு
நிதி செயல்பாடுகளை மேற்கொள்ளும் போக்கு தற்போது மக்களிடம் பெருகிவருகிறது. அதனால்
சொத்து நிர்வாகத்தில், உயில் எழுதுவதில் உள்ள முக்கியத்துவமும் அதுகுறித்த
விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
எனினும்,
இந்தியாவில் இன்னும்கூட, உயில் எழுதுவதை அதிக செலவு பிடிக்கும் விஷயமாகத்தான் பலர்
கருதுகின்றனர். அதனால் உயில் எழுதுவதைத் தவிர்க்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்குத் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்து, ஒளிவுமறைவற்ற வகையில்,
வலைதளத்தில் இலவசமாக உயில் எழுதித் தரும் சேவையை, ‘அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ்’
நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உயில் எழுதுவது சரியான முடிவு. அது, நிதிப்
பிரச்னையிலிருந்து வாரிசுதாரர்களைப் பாதுகாக்கும் என்பதுடன், குடும்ப
உறுப்பினர்களிடையே தேவையற்ற மோதல்களையும் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக