இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை
எழும்பூரைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த ஜூன்
மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடவடிக்கை இல்லாததால்
சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.
இதனை
விசாரித்த நீதிமன்றம், உயரதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி இளம்பெண்ணை
கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறை ஆணையர் ஏ.கே.
விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் சுதாகர், துணை
ஆணையர் சுகுநாத் சிங் ஆகியோரின் மேற்பார்வையில் எழும்பூர் உதவி ஆணையர் சுப்பிரமணி
தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
தனிப்படை
போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்
பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் ப்ரித்வி
திருப்பூருக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை
செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு,
திருப்பூர் நொச்சிப்பாளையத்தில் அந்தப் பெண் இருப்பதைக் கண்டுபிடித்து அவரை
தனிப்படை போலிஸார் மீட்டுள்ளனர். அந்த பெண்ணுடன் இருந்த ராஜேஷ் ப்ரித்வி போலிஸார்
வருவதை அறிந்து தப்பியோடி விட்டார்.
பின்னர்
மீட்கப்பட்ட இளம்பெண்ணை நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரது பெற்றோரிடம் போலிஸார்
ஒப்படைத்தனர். அடுத்தகட்டமாக, தப்பியோடிய ராஜேஷ் ப்ரித்வியை கைது செய்வதற்காக
தனிப்படை போலிஸார் மீண்டும் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ராஜேஷால்
பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட அந்த இளம்பெண்ணை வைத்தே ராஜேஷ் ப்ரித்வியை பிடிக்க
போலிஸார் திட்டமிட்டனர். அதன்படி, ராஜேஷ் ப்ரித்வியை தன் வீட்டுக்கு வரவழைத்து
பேசும்படி அந்தப் பெண்ணுக்கு போலிஸார் அறிவுறுத்தினர்.
அதுபோல செயல்பட்டு
ராஜேஷ் ப்ரித்வியை கையும் களவுமாக போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது ராஜேஷ் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிவந்தன.
அதாவது,
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜேஷ் ப்ரித்வி, தன்னை பல்வேறு விதமாக
அறிமுகப்படுத்திக்கொண்டு ஏராளமான பெண்களை ஏமாற்றி தன்னுடைய வலையில் விழவைத்து,
பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், அவ்வப்போது தனது பெயரை மாற்றிக்கூறி பல
பெண்களுடன் பழகியுள்ளான்.
பொறியாளர்,
மருத்துவர், பட்டதாரி என்றெல்லாம் கூறி ஏற்கெனவே 6 பெண்களை திருமணம் செய்து
ஏமாற்றியுள்ள ராஜேஷ், தற்போது ஏழாவதாக திருமணம் செய்வதற்கு சப் இன்ஸ்பெக்டர்
வேடத்தில் நடித்து சென்னை எழும்பூரைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியிருக்கிறான். சப்
இன்ஸ்பெக்டர் வேலை தனக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே கால் சென்டர் நிறுவனத்தைத்
தொடங்கியதாக அந்தப் பெண்ணிடம் பேசியிருக்கிறான் ராஜேஷ் ப்ரித்வி.
அதுமட்டுமல்லாமல்,
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.30 லட்சம் பணம் பெற்றது
தொடர்பாகவும் ராஜேஷ் ப்ரித்வி மீது காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட புகார்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், திருச்சி, கோவை, ஆந்திரா, காளஹஸ்தி என பல காவல்
நிலையங்களிலும் ராஜேஷ் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த
தகவல்களை தனிப்படை போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேஷ் ப்ரித்வியை
நீதிமன்றக் காவலில் எடுத்தபிறகு போலிஸ் காவலில் எடுத்து மேலதிக விசாரணை
மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக