>>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 9 செப்டம்பர், 2019

    எதுவுமே நிரந்தரமானது இல்லை..!


     Image result for எதுவுமே நிரந்தரமானது இல்லை..! 


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

      ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அவர் சென்ற வேலை முடிந்தவுடன் ஊருக்கு திரும்பிய போது அவரது அழகான பெரிய பண்ணைவீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு இவருடையது தான்.
    அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால், அவர் அந்த வீட்டை யாருக்கும் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவர் கண் முன்னே எரிந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

    தீ முழுவதுமாக பரவி விட்டதால் அதை அணைத்தாலும் பயனில்லை என்று, அவர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த செல்வந்தரோ என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடியே புலம்பிப் கொண்டிருந்தார். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினார்.

    அப்போது அவரின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான். தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதைக்கேட்ட செல்வந்தருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

    இப்போது செல்வந்தரும் கூடியிருந்த கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினார். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால், சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும், சோகமும் இப்போது அவரிடம் இல்லை.

    பிறகு சிறிது நேரத்தில் செல்வந்தரின் இரண்டாவது மகன் ஓடி வந்து தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் வேடிக்கை பார்க்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழுத் தொகையும் இன்னும் வாங்கவில்லை. வீட்டை வாங்கியவர் இப்போது மீதி பணத்தை தருவாரா என்பது சந்தேகம்தான் என்று கூறினான்.

    இதைக்கேட்ட செல்வந்தர் அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் அவர் சோகத்தில் ஆழ்ந்தார். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தார். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவரை வாட்டியது. சில நேரத்திற்கு பின்பு செல்வந்தரின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.

    அவன் தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கியவர் மிகவும் நல்லவர் போல் தெரிகிறது. இந்த வீட்டை வாங்க அவர் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியப்படி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினார் என்று மகிழ்ச்சியோடு கூறினான்.

    இதைக்கேட்ட செல்வந்தருக்கு மிகவும் சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு மகிழ்ந்தார். கண்ணீரும், சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினார். இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு தான்.

    நீதி :

    இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது என்று எதுவுமே இல்லை. அனைத்துமே அழிய கூடியதுதான்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக