இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உச்சிநாதர் கோவில், கடலூர் மாவட்டம்,
சிவபுரியில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்
காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு
சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். இக்கோவிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை
என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோவில் எனவும் வழங்குகின்றனர்.
மூலவர்
: உச்சிநாதர், மத்யானேஸ்வரர்.
தாயார்
: கனகாம்பிகை.
தல
விருட்சம் : நெல்லி.
தீர்த்தம்
: கிருபா சமுத்திரம்.
பழமை
: 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண
பெயர் : திருநெல்வாயில்.
ஊர்
: சிவபுரி.
மாவட்டம்
: கடலூர்.
தல வரலாறு :
திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத
இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது தந்தையுடன்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார்.
திருஞானசம்பந்தரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, அவர் தந்தை மட்டும் நீராடச்
சென்றார்.
சம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!"
என அழுவதை கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு
கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை
புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்துவிட்டார்.
சம்பந்தரின் தந்தை குளித்து விட்டு வந்து
பார்க்கும் போது, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச்
சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,"
எனச்சொல்லி குச்சியால் அடிக்க கையை ஓங்கினார்.
சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை
நீட்டிய சம்பந்தர், 'தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடினார். தன்
குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு
12 வயதில் திருமணம் நிச்சயமானது.
சம்பந்தரின் திருமணத்திற்காக மணமகள், உறவினர்
மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன்
கோயிலுக்கு சென்றனர். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால்
பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.
அப்போது சம்பந்தரும், அவருடன் வந்த அனைவரும்
பசியுடன் இருப்பதை உணர்ந்த இந்த தலத்தில் இருக்கும் இறைவன், கோவில் பணியாளர்
வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன்
'உச்சிநாதர்" என்றும் 'மத்யானேஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை
'கனகாம்பாள் கோவில்" என்று அழைக்கின்றனர்.
தல பெருமை :
சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி
திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்.
சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த
தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில்
அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம்
வந்து தரிசனம் செய்துள்ளார்.
சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல்
வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்" என அழைக்கப்பட்டது.
தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது.
சக்தியிடம்
ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக