வெள்ளி, 13 செப்டம்பர், 2019

களத்திர தோஷம் !

 Image result for களத்திர தோஷம் !
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




  களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும். களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும். இந்த 7வது வீடு பாவக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.

களத்திர தோஷம் என்றால் என்ன?

  லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்திருந்தாலோ இந்த அமைப்பு கொண்ட ஜாதகம் களத்திர தோஷ ஜாதகம் ஆகும்.

  4-ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2,7-ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவக் கிரகங்களுடன் சேர்ந்து 6,8,12-ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும். சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7-ம் இடம் பாவக் கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.

களத்திர தோஷம் வரக் காரணம் என்ன?

  களத்திர தோஷம் ஏற்படவும் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளே காரணம் ஆகும். முற்பிறவியில் செய்த ஏதேனும் ஒரு கொடிய செயல்களை பொருத்தே இந்த தோஷம் ஏற்படுகிறது.

களத்திர தோஷம் என்ன செய்யும்?

  களத்திர தோஷ ஜாதக அமைப்பு உடையவர்களுக்கு திருமணம் மிகவும் தாமதமாக நடைபெறும் அல்லது திருமணம் நடக்காமல் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

  அப்படியே திருமணம் நடந்தாலும் திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

  திருமண வாழ்வில் அதிக போராட்டங்கள் ஏற்படும். தம்பதியர்களிடையே மண முறிவை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் தன்மை இருக்காது.

  களத்திர தோஷம் உள்ள ஜாதகர்கள் அதே ஜாத அமைப்புள்ள ஜாதகரை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்வு சிறப்பாக அமையும்.

  இந்த தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

  களத்திர தோஷம் பெற்று திருமணம் அமையாமல் தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

  வீட்டில் சுமங்கலி பூஜை செய்தல் நற்பலன்களை கொடுக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்