>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 செப்டம்பர், 2019

    பதிலடி கொடுத்த தீர்ப்பு...!

     Image result for பதிலடி கொடுத்த தீர்ப்பு...!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    தேன்வயல் என்ற மிகவும் பழமையான கிராமம் ஒன்றில் பூங்குன்றன் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த கிராமத்தில் வசித்து வந்த அவர் மிகவும் ஏழ்மையானவர். ஒரு நாள் நகரத்தில் வசிக்கும் உறவினரைச் சந்திக்கக் கிளம்பினார். பகல் முழுவதும் கால்கடுக்க நடக்க வேண்டியிருந்தது. அவரது மனைவி, சாதம் மட்டும் கொடுத்து அனுப்பியிருந்தார். அவர்களுக்கு வசதி இல்லாததால் காயோ, குழம்போ கொடுத்து அனுப்பவில்லை.

    அவர் செல்லும் வழியில் ஒரு செல்வந்தர் வீட்டைக் கடக்கும்போது கமகமவென்று கறிக் குழம்பு வாசனை வந்துகொண்டிருந்தது. உடனே பூங்குன்றனுக்கு பசி எடுத்தது. அந்த வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் அமர்ந்து, வாசனையைப் பிடித்தபடியே பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டார்.

    திருப்தியாகச் சாப்பிட்டு முடித்ததும் செல்வந்தர் வீட்டுச் சமையல்கார அம்மாவிடம், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அம்மா, நீங்கள் பிரமாதமாகச் சமைப்பீர்கள் போலிருக்கிறது! வாசனையே அருமையாக இருந்தது. அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே வெறும் சாதத்தை வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன்.

    இல்லை என்றால் ஒரு வாய் சாதம் கூடச் சாப்பிட்டிருக்க முடியாது. உங்களுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். சமையல்கார அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த நேரம் செல்வந்தர் சாப்பிட வந்தார். அவருக்கு உணவு பரிமாறின போது என்னம்மா, குழம்பு கூட சரியா வைக்கத் தெரியல. இதை எப்படிச் சாப்பிடுவது? என்று கோபப்பட்டார் அந்தச் செல்வந்தர்.

    ஐயா, நான் வழக்கம்போல் நன்றாகத்தான் சமைத்தேன். நம் வீட்டு வாசலில் ஒருவர் கறிக்குழம்பின் வாசனையைப் பிடித்துக்கொண்டு, அவரது சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் தான் இந்தக் குழம்பில் ருசி குறைந்துவிட்டது போலிருக்கிறது என்று தயங்கியபடிச் சொன்னார். இதைக் கேட்ட செல்வந்தர் மிகவும் கோபம் அடைந்தார்.

    வேலைக்காரரை அழைத்து, அவர் எங்கிருந்தாலும் உடனே அழைத்துவரச் சொன்னார். சிறிது நேரத்தில் பூங்குன்றன் செல்வந்தர் முன் நின்றார். என் அனுமதி இல்லாமல் கறிக் குழம்பின் வாசனையைப் பிடித்திருக்கிறாய். அப்படி என்றால் வாசனையைத் திருடிவிட்டாய். அதனால் குழம்பின் ருசி குறைந்துவிட்டது. அதற்குரிய நஷ்ட ஈடு கொடு என்று செல்வந்தர் கேட்டார்.

    அதற்கு பூங்குன்றன் ஐயா, நான் திருடவில்லை. வாசனை தானாகவே என்னிடம் வந்தது. நான் ஏழை. நஷ்ட ஈடு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை என்றார். உடனே நியாயம் கேட்பதற்கு, கிராமத் தலைவரிடம் அழைத்துச் சென்றார் செல்வந்தர். நடந்ததைக் கேட்டறிந்த கிராமத் தலைவர் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார். பிறகு, பூங்குன்றனிடம் இருந்த ஒரே ஒரு செப்பு நாணயத்தை எடுத்து, கிண்ணத்தில் போடச் சொன்னார்.

    உடனே செல்வந்தர் அந்தச் செப்பு நாணயம் எனக்குதான்! என்று நினைத்தார். பூங்குன்றனை, உன் நாணயத்தை எடுத்துக்கொள். செல்வந்தரே, வாசனைக்குப் பதிலாக இந்தக் கிண்ணத்தில் உள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டிற்கும் சரியாகிவிட்டது என்றார் கிராமத் தலைவர்.

    கூடியிருந்த மக்கள் கிராமத் தலைவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டுப் பாராட்டினார்கள். செல்வந்தர் தலைகுனிந்தார். பூங்குன்றனும் நிம்மதியாக உறவினர் வீட்டை அடைந்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக