இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நிலவுக்கு
அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் குறித்து
கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என இஸ்ரோ
தெரிவித்துள்ளது.
நிலவின்
தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்
நெருங்கி வந்த நிலையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் சந்திரயான்-2
-வின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்து
வருகிறது. மேலும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்குமிடம்
கண்டறியப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என
சிவன் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில்,
இன்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட
போதிலும், அதிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. லேண்டருடன் தொடர்பு கொள்ள
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பதிவிட்டுள்ளது.
#VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet.
All possible efforts are being made to establish communication with lander.#ISRO
All possible efforts are being made to establish communication with lander.#ISRO
—
ISRO (@isro) September 10, 2019
முன்னதாக
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில்
இருந்து கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்
2. படிப்படியாக பல சுற்றுப்பாதைகளை கடந்து சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம்
லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இறங்க செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:55 மணி
அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க ஆயுத்தம் ஆனது. ஆனால் நிலவின்
தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் தகவல்
தொடர்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக