இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- வாதாயனா என்றால் 'குதிரை' என்று பொருள். அதாவது இந்த ஆசனம் பார்ப்பதற்கு குதிரையின் முகத்தை ஒத்து இருப்பதால் இதற்கு 'வாதாயனாசனம்' என்று பெயர்.
- முதலில் தரையில் உட்கார்ந்து, வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். ( அரை பத்மாசன நிலை)
- அதாவது, அடி வயிற்றை வலது குதிகால் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- அடுத்து, உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்.
- இவ்வாறு செய்யும்பொழுது, வலது கால் மூட்டுப்பகுதியால் தரையில் முட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கமாக வளைந்து இருக்க வேண்டும்.
- பின்னர் மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தவாறு உடலை நேராக நிமிர்த்தி, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவும்.
- பின்னர், மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, நெஞ்சுக்கு நேராக வணக்கம் தெரிவிப்பதுபோல கைகளை மடக்கி வைக்கவும்.
- இதே நிலையில் சுமார் 30 வினாடிகள் வரை இருக்க முயற்சி செய்யவும். சாதாரணமாக மூச்சு விடவும்.
- பின்னர் மெதுவாக கைகளை விடுவித்து இயல்பு நிலைக்கு வரவும்.
- இதுபோலவே கால்களை மாற்றி வைத்து மேலே செய்தது போல செய்யவும்.
- இடுப்பு பகுதிக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது. இதனால் இடுப்பு பகுதி நீட்டிக்கப்பட்டு இயல்பாக இயங்கும் நிலை உருவாகும்.
- இடுப்பு இணைப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளுக்கு நன்கு இயங்கும் தன்மையை அளிக்கிறது.
- இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது.
- மேலும் மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த ஆசனம் உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக