இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடந்த சில நாள்களாகத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.30,000 என்ற
வரம்பையும் தாண்டிச்செல்ல தொடங்கிவிட்டது. தங்கம் விலை ஏறும் செய்தியைக்
கேட்கும்போது, புதிதாக ஆபரணத்தங்கம் வாங்கும் எண்ணத்திலிருப்பவர்களுக்கு
பதற்றத்தையும் தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கு, அடடா... தங்கத்தை முன்பே
வாங்கி வைத்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்காகத்தான், கடந்த
நவம்பர் 2015 முதல், குறிப்பிட்ட கால இடைவெளியில் சாவரின் தங்கப் பத்திரங்களை
(SOVEREIGN GOLD BOND) ரிசர்வ் வங்கி வெளியிட்டுவருகிறது. ரிசர்வ் வங்கி
மட்டுமல்லாது அனைத்து வங்கிகளிலும் இதைப் பெற முடியும். தற்போது, வரும் செப்டம்பர்
9 (திங்கள்கிழமை) முதல் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை, கிராம் ரூ.3,890 (24
காரட் தங்கம் ஒரு கிராம் விலை) என்ற விலைக்கு தங்கப்பத்திரம் வெளியிடப்படும் என்ற
அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைவாக சலுகை விலையில் விற்பனை
செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில்
தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
ஆபரணத்
தங்கத்தை அழகுக்காக வாங்குவது தவறில்லை. ஆனால், முதலீடாக நினைத்து ஆபரணத் தங்கத்தை
வாங்குவது தவறான செயல். ஆபரணத்தங்கத்தை விற்கும்போது, செய்கூலி, சேதாரம் கழித்ததுபோக,
நடப்பு விலையைவிட குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இதனால் லாபம் பெரிய அளவில் கிடைக்காது.
ஆனால், தங்கப் பத்திரமாக வாங்கிச் சேமிக்கும்போது, தங்கத்தின்
விலை ஏறும்போது பத்திரத்தின் விலையும் ஏறும். உங்கள் முதலீட்டை நீங்கள் திரும்பப் பெறும்போது,
அன்றிலிருந்து மூன்று வேலை நாள்களுக்குமுன் உள்ள தூய தங்கத்தின் விலைக்கான தொகையை நீங்கள்
பெறலாம். இதனால் தங்கத்தைப் பாதுகாக்கும் பயமில்லை. தங்கத்தின் விலை ஏறுவதுகுறித்தும்
கவலைப்படத் தேவையில்லை.
தங்கப்பத்திரங்களைக்
குறைந்தபட்சம் ஒரு கிராம் வீதம் பல பத்திரங்களாக அன்றைய தூய தங்கத்தின் விலையில்
வாங்கலாம். அதிகபட்சமாக, ஒரு நிதியாண்டுக்கு தனி நபர், 500 கிராம் தங்கம் அளவுக்கு
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மொத்தத்துக்கு, ஒரு நபர் அல்லது இந்து
கூட்டுக்குடும்பத்துக்கு 4 கிலோ தங்கம் அளவுக்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு
செய்யலாம். அறக்கட்டளை அல்லது அதுபோன்ற நிறுவனங்கள் 20 கிலோ அளவுக்கு தங்கப்
பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளுக்கு, கூடுதலாக 2.5% ஆண்டு
வட்டியும் வழங்கப்படுகிறது.
சாவரின் தங்கப் பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி
எதுவும் செலுத்தவேண்டியதில்லை. ஆனால், பத்திரத்தை மற்றவர் பெயருக்கு மாற்றும்போது மட்டும்
வரி செலுத்த வேண்டியிருக்கும். தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யும் விழிப்புணர்வு
வந்தால், தங்கம் விலை உயர்வதுகுறித்து அச்சப்பட அவசியம் இருக்காது. சிறுகச்சிறுக முதலீடு
செய்துவரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக