இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எண்ணெய் இறக்குமதியை
இந்தியா நிறுத்தினால் இரு நாட்டிற்கு இடையிலான உறவு பாதிக்கும் என இந்தியாவுக்கான
ஈரான் தூதர் அலி செகேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா விதித்த பொருளாதார தடை
காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா. இது தொடர்பாக
இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியதாவது:
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை
இந்தியா அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இதற்கு காரணமாக தேசத்தின் நலன் என
கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்ததால் எங்களால் (ஈரான்) இந்தியாவிடம் இருந்து
எந்த வர்த்தகமும் செய்ய முடியவில்லை.
எண்ணெய் இறக்குமதியில் கிடைக்கும்
தொகையில் தான் இந்தியாவில் வர்த்தகம் செய்கிறோம். அதையும் நிறுத்தினால்
இந்தியாவிடம் இருந்து எப்படி பொருள் வாங்க முடியும். அமெரிக்கா எங்கள் நாட்டின்
மீது பொருளாதார தடை விதித்தாலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து வர்த்தகம் செய்து
வருகின்றன. இவர்களை போல் இந்தியாவும் தேச நலனுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.
அமெரிக்கா விதித்துள்ள தடையை இந்தியா
ஆதரிக்கக் கூடாது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் சபாஹர் துறைமுகத் திட்டம் மற்றும்
வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். இவ்வாறு அலி செகேனி
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக