இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவில்
இன்னும் சில அரசு முதலீட்டுத் திட்டங்கள் நடுத்தர மக்கள் மத்தியில் பிரபலமாகத்
தான் இருக்கின்றன.
- சேமிப்புக் கணக்கு டெபாசிட்
- டேர்ம் டெபாசிட்
- ஆர்டி
- 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
- 5 வருட மாதாந்திர வருமானத் திட்டம்
- 5 வருட தேசிய சேமிப்புச் சான்று
- பிபிஎஃப்
- கிஷான் விகாஸ் பத்திரம்
- செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
என
வெகு சில நிதி சார் அரசு திட்டங்களை மக்கள் இன்னும் நம்பி முதலீடு செய்து
வருகிறார்கள்.
இப்போது
வரும் காலாண்டுக்கு (அக்டோபர் 01 2019 முதல் டிசம்பர் 31, 2019) வட்டி விகிதத்தை
குறைக்க இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. செப்டம்பர் கடைசி
வாரத்தில் இந்த வட்டி விகிதங்களை குறைத்ததற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள்
வெளியாகும். கடந்த ஜூன் 28, 2019 அன்று தான் கடைசியாக வட்டி விகிதங்களை
மாற்றினார்கள். அதன் விவரங்கள் கீழே கொடுத்து இருக்கிறோம்.
பொது
சேமநல நிதியம் (Public Provident Fund) திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன்
வரையான காலாண்டில் 8 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர்
காலாண்டுக்கு 7.9 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள்.
அதே
போல ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்புச் சான்று (National Saving Certificate)
திட்டத்துக்கான வட்டி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 8 சதவிகிதம்
வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு 7.9 சதவிகிதமாக
குறைத்திருக்கிறார்கள்.
செல்வமகள்
திட்டத்துக்கு (Sukanya Samridhi Yojana) கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான
காலாண்டில் 8.5 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர்
காலாண்டுக்கு 8.4 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள்.
கிஷான்
விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன்
வரையான காலாண்டில் 7.7 சதவிகிதம் வட்டி வழங்கினார்கள். இந்த ஜூலை - செப்டம்பர்
காலாண்டுக்கு 7.6 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறார்கள். அதோடு 112 மாதங்களில்
முதிர்வடைய வேண்டிய திட்டம் இனி 113 மாதங்களில் முதிர்வடையும் எனவும் சொல்லி
இருக்கிறார்கள்.
ஐந்து
வருட டேர்ம் டெபாசிட்டுகளுக்கான (5 Year Term Deposit) வட்டி விகிதம் 7.8-ல்
இருந்து 7.7 ஆகவும், ஐந்து வருட ஆர் டி டெபாசிட்டுகள் 7.3 சதவிகிதத்தில் இருந்து
7.2 சதவிகிதமாகவும், ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களுக்கான (5
Yr Sr Citizen Saving Scheme) வட்டி விகிதம் 8.7-ல் இருந்து 8.6 சதவிகிதமாகவும்
குறைத்திருக்கிறார்கள்.
இதே
போல இந்த முறையும் குறைக்கலாம் எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள் மற்றும் சந்தை
வல்லுநர்கள். அதற்கு உலகப் பொருளாதார சரிவு, தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் வட்டி
விகிதங்களை காரணமாகச் சொல்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக