
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சிஸ்டம் நிறுவனங்களில்
பேடிஎம்-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்.
சமீபத்தில் தான் இந்த
நிறுவனத்தின் நிதி ஆண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் வெளியானது. அந்த நிதி
நிலை அறிக்கைகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் படிப் பார்த்தால் 2018 - 19 நிதி ஆண்டில்
மொத்தம் 4,217 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருக்கிறது பேடிஎம் நிறுவனம்.
என்ன காரணம், ஏன் பேடிஎம்
நிறுவனத்தின் நஷ்டம் இப்படி தாறு மாறாக அதிகரித்து இருக்கிறது..? ஏன் ஒரே வருடத்தில்
300 % நஷ்டம் அதிகரித்து இருக்கிறது..? இதற்கு எல்லாம் அவர்களே விடை கொடுத்து இருக்கிறார்கள்.
300 % நஷ்டம்
பேடிஎம் நிறுவனத்தின்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் நஷ்டம் 4,217 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால்
அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் 1,604 கோடி ரூபாயாக
மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி நஷ்டம் சுமாராக 300 சதவிகிதம் அதிகரிப்பதற்கு
என்ன காரணம் என அவர்களே விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
செலவு அதிகம்
கடந்த 2017 - 18 நிதி
ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 3,309 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த
2018 - 19 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 8.2 சதவிகிதம் அதிகரித்து
3,579 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பேடிஎம்
நிறுவனத்தின் செலவு 4,864 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் பேடிஎம்
நிறுவனத்தின் செலவீனங்கள் 7,730 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக செலவீனங்கள்
சுமார் 60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
எதற்கு செலவு
பேடிஎம் நிறுவனம் தன்னுடைய
பிராண்டின் பெயரை மக்கள் மத்தியில் இன்னும் பெரிதாக பதிய வைக்க பெரிய அளவில் செலவு
செய்து இருக்கிறார்களாம். அது போக பல்வேறு முதலீடுகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு செலவீனங்களையும்
செய்து இருக்கிறார்களாம். அதனால் தான் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் செலவீனங்கள் சுமாராக
60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
எதிர்காலம்
இப்போதே பேடிஎம் நிறுவனம்
தன்னுடைய பேமெண்ட் வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தரகுப் பணி, பயணச் சீட்டு
புக் செய்வது, ஹோட்டல்கள் மற்றும் மொபைல் வேலட் சேவைகள் போன்ற பல்வேறு வியாபாரங்களில்
தங்கள் இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இந்த வியாபாரங்களில்
இருந்து இன்னும் நிறைய வருவாய் வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மதிப்பு
கடந்த மாதம் தான் பேடிஎம்
நிறுவனத்தின் மதிப்பீடுகள் சுமாராக 25 சதவிகிதம் அதிகரித்து 15 பில்லியன் டாலர் மதிப்பு
கொண்ட நிறுவனமாக மாறி இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பு 2020 - 2021 நிதி ஆண்டில்
பேடிஎம் நிறுவனம் சுமார் 200 கோடி லாபம் பார்க்கலாம் என்றும், வரும் 2026 நிதி ஆண்டில்
சுமார் 8,512 கோடி லாபம் பார்க்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருப்பதையும் இந்த நேரத்தில்
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக