வியாழன், 5 செப்டம்பர், 2019

புத்திர தோஷம் !

Image result for புத்திர தோஷம் !
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.comபுத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5-ம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். ஆண், பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். புத்திரஸ்தானமான 5-ம் பாவம் பாதிக்கப்பட்டால், குழந்தை யோகம் உண்டாகத் தடை உண்டாகும்.

லக்னப்படி புத்திர தோஷம் :

மேஷ லக்னம் :

மேஷ லக்னத்திற்கு 5-ம் இடம் சிம்மம். சிம்மத்தின் அதிபதியான சூரியன் கன்னி, துலாம், விருச்சகம், மீனம் போன்றவற்றில் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.

ரிஷப லக்னம் :

ரிஷப லக்னத்திற்கு 5-ம் இடமான கன்னியில் சுக்கிரன் இருந்தாலும், புதன் துலாம், மேஷம், தனுசில் இருந்தாலும் புத்திர தடை ஏற்படும்.

மிதுன லக்னம் :

மிதுன லக்னத்தின் 5-ம் இடம் துலாம். துலாமின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் 5-ம் இடமான கன்னியில் இருந்து, துலாமில் சூரியன் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

கடகம் லக்னம் :

கடக லக்னத்தின் 5-ம் இடம் விருச்சகம். லக்னாதிபதி விருச்சகத்தில் இருந்து, செவ்வாய் கடகத்தில் நின்றால் புத்திர தடை உண்டு. அதுமட்டுமல்லாமல் விருச்சகத்தில் புதன் இருந்து, கேது மற்றும் சனி நின்றாலும் அது புத்திர தோஷ ஜாதகமாகும்.

சிம்ம லக்னம் :

சிம்ம லக்னத்தின் 5-ம் இடம் தனுசு. தனுசுக்கு அதிபதியான குரு 6-ம் இடமான மகரத்திலும், 6-ம் இடத்திற்கு உரிய சனி தனுசில் இருந்தாலும் அந்த ஜாதக அமைப்பு புத்திர தோஷம் உடையதாகும்.

கன்னி லக்னம் :

கன்னி லக்னத்திற்கு 5-ம் இடம் மகரம். மகரத்தில் சனி இருப்பது தோஷமில்லை என்றாலும் சூரியனுடன் இணைந்து இருந்தால், 5-ம் இடமும் 5-ம் பாவாதிபதியும் கெடுகிறார், எனவே இது புத்திர தோஷ அமைப்பாகும்.

துலாம் லக்னம் :

துலாம் லக்னத்திற்கு 5-ம் இடம் கும்பம். கும்பத்தின் அதிபதியான சனி மேஷத்தில் இருந்து, கும்பத்தில் செவ்வாய் நின்றாலோ, சனி கன்னி ராசியில் இருந்து கும்பத்தில் குரு பார்வை செய்தாலோ, செவ்வாய் சிம்மத்தில் நின்று பார்த்தாலோ புத்திரதோஷம் ஏற்படும்.

விருச்சக லக்னம் :

விருச்சக லக்னத்தின் 5-ம் இடம் மீனம். மீனத்தில் சனி இருந்து, மகரத்தில் குரு சஞ்சாரம் செய்தால் தோஷம் ஆகும். மீனத்தில் குரு இருந்து மகரத்தில் சனி நின்றாலும், புத்திர தோஷம் உண்டாகும்.

தனுசு லக்னம் :

தனுசு லக்னத்தின் 5-ம் இடம் மேஷம். மேஷத்தின் அதிபதியான செவ்வாயுடன் சனி தொடர்பு ஏற்பட்டாலோ, செவ்வாய் 8-ம் இடத்தில், சனி 5-ம் இடமான மேஷத்தில் இருந்தால் இந்த ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு.

மகர லக்னம் :

மகர லக்னத்தின் 5-ம் இடம் ரிஷபம். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் கன்னியில் நீசமடைந்து, 5-ல் ராகு கேது சூரியனுடன் இணைந்திருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

கும்ப லக்னம் :

கும்ப லக்னத்திற்கு 5-ம் இடம் மிதுனம். மிதுனத்தில் சந்திரன் இருந்து, மீனத்தில் புதனும் நின்று பாவிகள் பார்த்தால் புத்திர தடை உண்டாகும்.

மீன லக்னம் :

மீன லக்னத்துக்கு 5-ம் இடம் கடகம். கடகத்தில் சூரியன் சஞ்சரித்தாலோ, சுக்கிரன் சனி சஞ்சரித்தாலோ புத்திரதோஷம் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்