>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 13 செப்டம்பர், 2019

    வீரமும், அறிவும்..!

     Image result for வீரமும், அறிவும்..!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



      மங்களபுரம் என்ற ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு அமைச்சரும் இருந்தார். ராஜாவோட உயரம் நாலரை அடிதான். ஆனால் அமைச்சரோ ஆறடி உயரம் இருந்தார். ராஜா குள்ளமாக இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் இருந்தார். அவர் விருப்பத்திற்கேற்ப அமைச்சரை நடத்தினார்.

    ஒருமுறை ராஜாவும், அமைச்சரும் மாறுவேஷத்தில் நகர்வலம் போனார்கள். அப்போது ஒரு வீட்டில் ஒரு தந்தை, தன் பையனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். நல்லா குதிச்சு உயரமா ஆகற வழியைப்பாரு. இல்லேன்னா நம்ம ராஜா போல குள்ளமா ஆயிடுவ என்று கூறினார்.

    இதை கேட்டதும் ராஜாவுக்கு கடுங்கோபம் வந்தது. மாறுவேஷத்தை யாருக்கும் காட்டிக்கொடுக்கவும் விரும்பவில்லை. இருவரும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைக்கு முழுவதும் ராஜா கோபமாகவே இருந்தார். மறுநாள் காலையில் ஊர் முழுவதும் தண்டோரா போடச் சொன்னார் ராஜா.

    இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நாலரை அடி உயரத்திற்கு மேல் ஊரில் ஆம்பிளைங்க யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோரும் உடனடியாக ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பை ராஜா வெளியிட்டார்.

    அதனால் ஊரில் இருந்த எல்லா பெரியவங்களும் உடனடியாக காலி பண்ணிட்டாங்க. அமைச்சர் ஆறடி உயரம் இருந்தாலும், அமைச்சர் மட்டும் காலி பண்ணாமல் இருந்தார். ஆனால், ராஜா பார்த்தால் திட்டுவாரேன்னு மறைந்து வாழ்ந்து வந்தார். எல்லா பெரியவங்களும் வெளியே சென்றதால் சிறு வயது சிறுவர்கள் சில பேரை ஒற்றர்களாகவும், அமைச்சர்களாகவும் ராஜா நியமித்தார்.

    ஆனால், வீரர்களாக இருக்க உயரமும் வேணுமே? அதனால் வீரர்கள் மட்டும் கிடைக்கவே இல்லை. ராஜாவை எப்போது கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த எதிரி நாட்டு ராஜாவுக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதனால் மங்களபுரம் மேல் போர் தொடுக்க போவதாக அறிவிப்பு தந்தார். அத்துடன், தனது வீரர்களோடு அந்த ஊரையும் முற்றுகையிட்டார்.

    மங்களபுரத்தில் வீரர்கள் இல்லாததால் ராஜாவுக்கு ஒரே கவலை. இந்த நேரத்தில் ராஜாவின் முன்னால் அமைச்சர் அரண்மனைக்கு வந்தார். அமைச்சரைப் பார்த்ததும் ராஜாவுக்கு சந்தோஷம். ஆனால், வெளியில் அதை காட்டிக்காமல் கோபமாக பேசினார்.

    இப்ப ஏன் இங்க வந்த? என்று கேட்டார். மன்னரே, என் கால் இரண்டையும் பாருங்கள். நான் குள்ளமா இருக்கணும்கிறதால அப்படியே வெட்டிக்கொண்டேன் என்றார் அமைச்சர். ராஜா அப்போதுதான் அமைச்சரின் கால்களைப் பார்த்தார். அவருடைய கால்கள் குண்டாக இருந்தது.

    ஆனால், கால் முழங்காலை மடிச்சு சின்னதாக இருப்பது போல காண்பித்திருந்தார் அமைச்சர். ராஜாவுக்குப் புரிந்தது. அமைச்சரின் நகைச்சுவையை ரசித்தார். உடனே வேலையில் சேரும்படி அமைச்சருக்கு ராஜா உத்தரவிட்டார்.

    உடனடியாகக் களத்தில் இறங்கிய அமைச்சர், உத்தரவுகளைப் பிறப்பித்தார். குள்ளமான சிறுவர்களை எதிரி நாட்டு ஒற்றர்களுக்கு சந்தேகம் வராமல் வெளியே செல்வதற்குப் பயிற்சியளித்தார். அவர்கள் மூலம் ஊரை காலி செய்து விட்டுப் போன வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    வீரர்கள் எல்லோரும் பின்புறமாக அரண்மனையில் குவிந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரி நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தாங்க முடியாமல் எதிரி நாட்டுப் படையினர் ஓடிவிட்டனர்.

    நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக அமைச்சருக்கு ராஜா நன்றி தெரிவித்தார். நாட்டை ஆள்வதற்குத் தேவை வீரமும், அறிவும்தான். அதை ஒழுங்காகச் செய்வதுதான் முக்கியம் என்பதை ராஜா உணர்ந்து கொண்டார். உடனே உயரமானவர்களுக்கு விதித்த தடையை நீக்கினார். எல்லோரும் ராஜாவை வாழ்த்தினார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக