Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சோத்துப்பானை..!

Image result for சோத்துப்பானை  சிறுமியர் நடிப்பு-விளையாட்டு
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இன்றைய காலத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் நம்மை வசப்படுத்திவிட்டதால் குழந்தைகள் பழங்காலத்தில் விளையாடும் விளையாட்டுகளை மறந்து இருப்பார்கள். அந்தக் காலத்தில் குழந்தைகள் உற்சாகமாக வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் எல்லாம் இன்று நாம் கையில் வைத்திருக்கும் செல்போனில் வந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் மறந்த பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிப்பு விளையாட்டான சோத்துப்பானை விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

பல பேர் ஒன்றுச்சேர்ந்து ஒரு குழுவாக விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டை விளையாடும் நபர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் விளையாட்டில் இரு நபர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் சோறாக்கும் செயல் எப்படி என்பதை மற்றவர்களுக்கு நடித்துக் காட்ட வேண்டும்.

பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டே நடிப்பார்கள். உதாரணமாக, நெல் குத்துதல், புடைத்தல், அரிசி உலையில் போடுதல், கரண்டியால் கிளறுதல், குழம்பு வைத்தல் போன்ற செயல்களை சொல்லிக்கொண்டே அந்த இருவர் மட்டும் நடித்துக் காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்த பின் உரையாடல் நிகழும், எப்படியென்றால் விளையாட்டில் இருக்கும் மீதமுள்ள நபர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த இரு நபரிடம் கேள்விக் கேட்க வேண்டும்.

அதற்கு சமைத்த இரு நபர்களும் மாறி மாறி விடை சொல்வதுமாக உற்சாகமாக உரையாடல் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும்.

சோறு எங்கே?

பூனை தின்றுவிட்டது..

பூனை எங்கே?

மரத்திலே ஏறிவிட்டது..

மரம் எங்கே?

அடுப்பெரிச்சாச்சு..

அடுபெரிச்ச சாம்பல் எங்கே?

பல் துலக்கியாச்சு..

பல் துலக்கி துப்பிய எச்சில் எங்கே?

புல்லுக்கட்டில் துப்பியாச்சு..

புல்லுக்கட்டு எங்கே?

மாடு தின்னுபுடுச்சு..

மாடு எங்கே?

பாட்டி வீட்டிலே..

பாட்டி எங்கே?

செத்துப்போச்சு..
இவ்வாறு விளையாடும் நபர்கள் அனைவரும் சொல்ல வேண்டும். பிறகு எழுந்து அனைவரும் ஓட வேண்டும். அதன்பின் மறுபடியும் ஒன்றுச்சேர்ந்து அடுத்த இருவரை தேர்வு செய்து இதேபோல் விளையாட வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக