Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 7 செப்டம்பர், 2019

புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள


 Image result for புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


புத்திரர்களால் செல்வம், செல்வாக்கு யோகம் யாருக்கு?

மனிதனின் வாழ்க்கையில் பிள்ளைகளால் செல்வம் மற்றும் செல்வாக்கு பெறும் பெற்றோர்கள் யார் என்றும் அது போன்ற யோகம் யாருக்கு என்றும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தந்தையின் லக்கனத்திற்கு 5,7,9,10 போன்ற வீடுகளில் லக்கனமாக அமைய பிறந்த பிள்ளைகள் மற்றும் சூரியன் 6,8,9,12 போன்ற இடங்களில் பலப்படாமல் உதித்த புத்திரர்களால் பெற்றோர்களுக்கு யோகம் உண்டாகும்.

சிம்ம வீட்டில் இராகு, செவ்வாய், கேது, சனி போன்ற தீய கிரகம் சஞ்சரிக்காத நிலையில் உள்ள புத்திரர்கள், சூரியன், ராகு இணைந்து சஞ்சரிக்காத நிலையிலும் பெற்றோர்களுக்கு பேரும் புகழும் கிட்டும்.

மேலும் செல்வாக்கும் மிகுந்து சமூகத்தில் மிகச்சிறந்த ஆளாக விளங்கி எல்லாவிதமான சுகங்களையும் பெற்று வாழ்வர்.

இது போன்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளினால் பெற்றோர்கள் அனைத்துவிதமான செல்வம், செல்வாக்கு யோகம் பெறும் வாய்ப்புகள் உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள் :

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும். முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.

ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளதால், சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவனின் குமாரனான முருகப்பெருமானை சஷ்டி திதியில் வணங்கினால், மக்கள் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

எந்தக் கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும். திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.

குலதெய்வம் கோவிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும்.

எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் நீங்கி விடும். பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

புத்திர தோஷ பாதிப்பு குறைய செல்ல வேண்டிய கோவில்கள் :

அருள்மிகு சோமநாதர் திருக்கோவில், நீடூர், நாகப்பட்டினம்.

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருவடிசூலம், காஞ்சிபுரம்.

அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோவில், பாரியூர், ஈரோடு.

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்.

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில், குடவாசல், திருவாரூர்.

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில், இலுப்பைக்குடி, சிவகங்கை.

அருள்மிகு வீரசேகரர் திருக்கோவில், சாக்கோட்டை, சிவகங்கை.

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோவில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்.

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோவில், இடைக்காட்டூர், சிவகங்கை.

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை.

அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக