Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 செப்டம்பர், 2019

எழுத்து கண்டுபிடித்தல் !!

Image result for எழுத்து கண்டுபிடித்தல் !!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



என்னதான் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.

 வீட்டில் இருக்கும் பெரியவர்களால் ஓடி, ஆடி விளையாட்டைக் கற்றுத்தர முடியாததால் ஒரே இடத்தில் அமர்ந்தாற்போல் சொல்லிக் கொடுப்பார்கள்.

 தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிவிட்டது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், மரத்தின் நிழலில் விளையாடிய விளையாட்டுகளும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

 அப்படி நாம் மறந்த கிராமத்து விளையாட்டுகளில் ஒன்றான எழுத்து கண்டுபிடித்தல் விளையாட்டைப் பற்றி பார்ப்போமா...!

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு நபர்கள் விளையாடலாம்.

விதிமுறைகள் :

 ஒரு விரலால் மட்டும் எழுதவேண்டும். எழுதும்போது விரல்கள் முதுகில் நன்றாக அழுத்தி எழுத வேண்டும்.

எப்படி விளையாடுவது?

 இரண்டு நபர்களில் ஒருவர் குனிந்து கொள்ள வேண்டும். மற்றொருவர் முதுகில் எழுத வேண்டும்.

 மற்றொருவர் விரலால் எழுதும் பெயரையோ, ஊரையோ குனிந்திருக்கும் நபர் கண்டுபிடிக்க வேண்டும். விரல்களின் அசைவைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே சரியாக சொல்ல முடியும்.

 கண்டுபிடிக்க இயலாதவண்ணம் புதுப்புது வார்த்தைகளை எழுதுவர். சில நேரம் அப்படி ஒரு வார்த்தை உள்ளதா? என்ற ஆராய்ச்சியெல்லாம் நடக்கும்.

 குனிந்திருக்கும் நபரால் அந்த வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லையெனில் அவர் அவுட் ஆகி விடுவார்.

 பின் குனிந்திருக்கும் நபர் எழுத வேண்டும். எழுதிய நபர் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறே தொடர்ந்து விளையாட்டை விளையாடி மகிழ்வர்.

விளையாட்டின் பயன்கள் :

 நிறைய தமிழ் சொற்களை அறிய முடியும்.

 கவனிப்புத் திறனை அதிகப்படுத்த முடியும்.

ஒருமுகச் சிந்தனையை வளர்க்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக