Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

`விளம்பரமில்லாமல் மொபைல் கேம்ஸ்…!’ - கூகுளின் புதிய முயற்சி

 Image result for `விளம்பரமில்லாமல் மொபைல் கேம்ஸ்…!’ - கூகுளின் புதிய முயற்சி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மொபைலில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருக்கும் போது வரும் தேவையில்லாத விளம்பரங்கள் பலருக்கும் எரிச்சலூட்டும் ஒன்றாக இருக்கும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக கூகுள் கொண்டுவந்திருக்கும் புதிய திட்டம்தான் கூகுள் பிளே பாஸ். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் விளையாட்டுப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகம் செய்த Apple Arcade போன்றே செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாதம் $4.99 (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.350) அமெரிக்க டாலர் செலுத்தினால் 350-க்கும் மேற்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்களை எந்த ஒரு விளம்பர இடையூறும் இல்லாமல் பயன்படுத்த முடியும். இதுவரை ஒவ்வொரு ஆப்ஸ்க்கும் உள்ள பிரீமியம் அல்லது ஆட்பிரீ வெர்ஷனை பெற நாம் தனித்தனியாக ஒவ்வொரு ஆப்க்கும் In-app purchase மூலம் அதிக கட்டணத் தொகைகளைச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த பிளே பாஸ் சேவை மூலம், பல்வேறு கேம்கள் மற்றும் ஆப்ஸ்களை குறைந்த செலவில் பயன்படுத்தலாம். மேலும் இந்த சேவையில் திருப்தி இல்லையென்றாலும் எப்போது வேண்டுமானாலும் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கு மேல் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்தும் போன்களில் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். தற்போது முதல் கட்டமாக Stardew Valley, Monument Valley, Limbo, Risk, Star Wars: KOTOR, Mini Metro, Old Man’s Journey, Facetime, AccuWeather போன்ற 300 மேற்பட்ட ஆப் மற்றும் கேம்களை இத்திட்டத்தின் கீழ் சேர்த்துள்ள கூகுள் நிறுவனம், மேலும் மாதம் பல புதிய ஆப்களை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரவுள்ளதாகக் கூறியுள்ளது.

தற்போது அமெரிக்க கூகுள் பயனர்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது கூகுள் பிளே பாஸ். அறிமுக சலுகையாக முதல் வருடத்திற்கு மாதம் $1.99 அமெரிக்க டாலர்கள் என்கிற செலவின் கீழ் இந்தக் கட்டண சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூடுதலாக முதல் பத்து நாள்கள் இச்சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெகு விரைவிலேயே இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு இந்த சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக