இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அனைவருக்கும்
தெரியாத மிகவும் சிறப்பு வாய்ந்த அரிய ஆன்மிக தகவல்கள் நிறைய உள்ளது. அவை
அனைத்தும் கடவுளின் சக்தியில் நடைபெறுபவை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு
ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். அவை நம்மில் பலருக்கும் தெரிந்தவையும் இருக்கும்,
சில தெரியாத விஷயங்களும் இருக்கும்.
ஆனால்
அவை அனைத்துமே நம்மை வியக்கவும், பிரமிக்கவைக்கவும் கூடியவை. அவ்வாறு இயற்கை எழில்
கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் அருகில் உள்ளது திருந்துதேவன்குடியில்
வீற்றிருக்கும் கற்கடேஸ்வரர் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது....!
தேவாரப்பாடல்
பெற்ற 274 சிவாலயங்களில் 42வது சிவாலயமாக உள்ள அருள்மிகு கற்கடேஸ்வரர் ஆலயம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், வேப்பத்தூர் அருகில் உள்ளது
திருந்துதேவன்குடியில் உள்ளது.
இரண்டு
அம்பிகை சன்னிதிகள் இக்கோவிலில் இருக்கின்றன. இந்தக் கோவிலின் கருவறையில்
இருக்கும் சிவலிங்கத்தில், இந்திரன் வாளால் வெட்டிய வெட்டுத் தழும்புகளும்,
சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறிய துவாரமும் இருக்கின்றன.
ஆடி
அமாவாசையும், பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில், 21 குடம் காராம் பசுப்பாலைக்
கொண்டு இங்கிருக்கும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து நீராட்டினால்,
சிவலிங்கத்திலிருந்து நண்டு வெளியில் வந்து காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில்
கூறப்பட்டுள்ளது.
இந்திரனின்
கர்வத்தின் காரணமான நண்டை வெட்ட முயன்ற போது, அந்த வாள் தவறுதலாக சிவலிங்கத்தின்
மீது பட்டதும் பதறினான். சிவபெருமான் தோன்றி அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தி
திருந்தினான். தேவர்களின் தலைவர் திருந்திய இடம் என்பதால், இந்த தலம்
'திருத்துதேவன்குடி" என்று வரலாறு கூறகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக