Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

மாங்கல்ய தோஷம் !

 Image result for மாங்கல்ய தோஷம் !

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.

8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும்.

மாங்கல்ய தோஷம் எதனால் வருகிறது?

சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் செய்த தவறுகள் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை :

ஒரு புதிய பொட்டு தாலி தங்கத்தில் வாங்கி தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பூஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொள்ளவும். ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ தங்களது இஷ்ட தெய்வங்களை மனதில் வழிபாடு செய்துவிட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த மங்கள தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற பெண்ணிற்கு கட்ட வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து அந்த தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்த்து விடவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும்.

அதே சமயத்தில் தோஷம் கழிக்கும் போது உடுத்தி இருந்த உடைகளை மீண்டும் உடுத்தக் கூடாது. அதனால் அந்த உடைகளை வீசி எறியவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக தர வேண்டும்.

அல்லது அந்த தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாள் செவ்வாய் அல்லது வெள்ளி இல்லாமலிருப்பது நல்லது. இப்படி தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். இது பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நிவர்த்தி செய்ய ஜோதிடரை அணுகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக