இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப்
பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே,
ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப்
பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
கறிச்சுவையூட்டிகளின் ஆங்கில உச்சரிப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.
இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
கறிச்சுவையூட்டிகளின் ஆங்கில உச்சரிப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.
List of Provisions...
|
இல:
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
|
1
|
Acorus
calamus
|
வசம்பு
|
|
2
|
Almondsuhashuhasi
|
பாதாம்பருப்பு
|
|
3
|
Anise seed
|
சோம்பு/பெருஞ்சீரகம்
|
|
4
|
Asafetida
|
பெருங்காயம்
|
|
5
|
Basil
leaves
|
துளசி இலை
|
|
6
|
Bay leaves
|
புன்னை இலை
|
|
7
|
Bishop’s
weed
|
ஓமம்
|
|
8
|
Black cumin
|
கருஞ்சீரகம்
|
|
9
|
Black
pepper
|
கருமிளகு
|
|
10
|
Butter
|
வெண்ணைய்
|
|
11
|
Butter
milk
|
மோர்
|
|
12
|
Capsicum
|
குடைமிளகாய்
|
|
13
|
Cardamom
|
ஏலம்
|
|
14
|
Cashew
nut
|
முந்திரிப்பருப்பு
|
|
15
|
Cheese
|
பாலாடைக்கட்டி
|
|
16
|
Chili powder
|
மிளகாய் தூள்
|
|
17
|
Chilies
|
மிளகாய் (கொச்சிக்காய்)
|
|
18
|
Cinnamon
Sticks
|
கறுவாப்பட்டை
|
|
19
|
Cloves
|
கிராம்பு
|
|
20
|
Coconut milk
|
தேங்காய் பால்
|
|
21
|
Coriander
leaves
|
கொத்தமல்லி இலை
|
|
22
|
Coriander
powder
|
கொத்தமல்லி தூள்
|
|
23
|
Crumb
powder
|
றஸ்குத் தூள் (நொறுக்குத் தூள்)
|
|
24
|
Cubes
|
வால்மிளகு
|
|
25
|
Cumin
|
சீரகம்
|
|
26
|
Curds
|
தயிர்
|
|
27
|
Curry
leaves
|
கறிவேப்பிலை
|
|
28
|
Curry powder (Masala)
|
கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
|
|
29
|
Daun
Pandan leaves
|
இரம்பை இலை
|
|
30
|
Dried chilies
|
காய்ந்த/செத்தல் மிளகாய்
|
|
31
|
Dried
ginger
|
சுக்கு
|
|
32
|
Dried
hottest chilies
|
உறைப்புச்செத்தல் மிளகாய்
|
|
33
|
Dried shrimp
|
உலர் சிற்றிறால்
|
|
34
|
Fennel
|
பெருஞ்சீரகம்
|
|
35
|
Fenugreek
|
வெந்தயம்
|
|
36
|
Gallnut
|
கடுக்காய்
|
|
37
|
Garlic
|
வெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
|
|
38
|
Ghee
|
நெய்
|
|
39
|
Gingelly
oil
|
நல்லெண்ணை
|
|
40
|
Ginger
|
இஞ்சி
|
|
41
|
Gingili
(seasame seeds)
|
எள்ளு
|
|
42
|
Green
cardamom
|
பச்சை ஏலம்
|
|
43
|
Green
chilli
|
பச்சை மிளகாய்
|
|
44
|
Ground nut
oil
|
கடலையெண்ணை
|
|
45
|
Honey
|
தேன்
|
|
46
|
Jaggery
|
சக்கரை
|
|
47
|
Lemon
|
எழுமிச்சை
|
|
48
|
Lemongrass
|
வெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
|
|
49
|
Lemongrass
powder
|
வேட்டிவேர் தூள்
|
|
50
|
Licorice
|
அதிமதுரம்
|
|
51
|
Long pepper
|
திப்பிலி/ கண்டந்திப்பிலி
|
|
52
|
Mace
|
சாதிபத்திரி
|
|
53
|
Milk
|
பால்
|
|
54
|
Mint leaves
|
புதினா
|
|
55
|
Musk
|
கஸ்தூரி
|
|
56
|
Mustard
|
கடுகு
|
|
57
|
Nigella-seeds
|
கருஞ்சீரகம்
|
|
58
|
Nutmeg
|
சாதிக்காய்
|
|
59
|
Oil
|
எண்ணை
|
|
60
|
Onion
|
வெங்காயம்
|
|
61
|
Palm
jiggery
|
பனங்கருப்பட்டி
|
|
62
|
Pepper
|
மிளகு
|
|
63
|
Phaenilum
|
மணிப்பூண்டு
|
|
64
|
Pithecellobium
dulce (Madras thorn)
|
கொடுக்காபுளி
|
|
65
|
Poppy
|
கசகசா
|
|
66
|
Raisin
|
உலர்திராட்சை
|
|
67
|
Red chilli
|
சிகப்பு மிளகாய்
|
|
68
|
Rolong
|
கோதுமை நெய்
|
|
69
|
Rose water
|
பன்னீர்
|
|
70
|
Saffron
|
குங்கமம்
|
|
71
|
Sago
|
சவ்வரிசி
|
|
72
|
Salad
onion
|
செவ்வெங்காயம்
|
|
73
|
Salt
|
உப்பு
|
|
74
|
Sarsaparilla
|
நன்னாரி
|
|
75
|
Small
chilli
|
சின்ன மிளகாய்
|
|
76
|
Small
onion
|
சின்ன வெங்காயம்
|
|
77
|
Star
anise
|
நட்சத்திரச் சோம்பு
|
|
78
|
Sugar
|
சீனி
|
|
79
|
Tail
pepper
|
வால்மிளகு
|
|
80
|
Tamarind
|
புளி
|
|
81
|
Tomato
|
தக்காளி
|
|
82
|
Turmeric
|
மஞ்சள்
|
|
83
|
Turmeric powder
|
மஞ்சள் தூள்
|
|
84
|
Vermicelli
|
சேமியா
|
|
85
|
Vinegar
|
காடி (வினிகர்)
|
|
86
|
White onion
|
வெள்ளை வெங்காயம்
|
குறிப்பு:
1.
Cumin seeds - சீரகம்
Black pepper seeds - கருமிளகு
Cumin seeds, Black pepper seeds போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.
2.
Cinnamon sticks - கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை
"Cinnamon Sticks" எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.
3.
Coriander leaves கொத்தமல்லி இலை
Curry leaves கறிவேப்பிலை
Leaf – இலை
Leaves – இலைகள்
மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே எம் தமிழில் உள்ளது.
4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் எப்படி என்று தெரியாது. தெரிந்தோர் கூறுங்கள்.
தொடர்புடைய இடுகைகள்:
பழங்கள் (List of Fruits)
மரக்கறிகள் (List of Vegetables)
இவ்வட்டணையில் விடுபட்ட கறிச்சுவையூட்டிகளின் பெயர்கள் ஏதும் இருப்பின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத் தந்துதவினால் இணைத்து விடுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக