Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 செப்டம்பர், 2019

“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்!

 Image result for படத்தைப் பொறுத்து 'போனஸ்' மாறுபடலாம்
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இந்த போனஸ் ரேட் என்பது மாறுபடும் எனவும் தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. 

ஹைலைட்ஸ்
  •  படத்தைப் பொறுத்து 'போனஸ்' மாறுபடலாம்
  • Netflix, பட உரிமையை மொத்தமாக வாங்கிவிடும் முறையைத்தான் பின்பற்றுகிறது
  • பெரிய படங்களுக்கு ஏற்றாற் போல் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாகும் திரைப்படம் ஹிட் கொடுத்தால், அதன் உரிமையாளர்களுக்கு போனஸ் கொடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். இதன் மூலம் நல்ல திரைப்படங்களை தங்கள் தளத்துக்கு வரவழைக்க முடியும் என்று நெட்ஃபிளிக்ஸ் நம்புகிறதாம். 

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இந்த போனஸ் ரேட் என்பது மாறுபடும் எனவும் தகவல் தெரிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. 

நெட்ஃபிளிக்ஸ், பொதுவாக ஒரு நல்ல படத்திற்கு நல்ல பணம் கொடுத்து வாங்கி, தன் தளத்தில் பதிவிடும். தற்போது அந்த நிலை மாற்ற உள்ள நிலையில், நிறுவனத்துக்கு உள்ளேயே பலகட்ட ஆலோசனை நடந்து வருகிறதாம். 

ஹாலிவுட் சினிமாக்களைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படம் வெற்றியடைந்தால் அதில் குறிப்பிட்ட சதவிகித லாபம், படத்தை உருவாக்கியவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே தயாரிக்கும் படங்கள் திரையரங்கில் பெரிய அளவு ரிலீஸ் ஆவதில்லை. 

அதனால், திரைப்பட உருவாக்கியவர்களுக்குக் கொடுக்கும் தொகையில் சிக்கல் நிலவி வருகிறதாம். 

டிஸ்னி போன்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், அதன் நட்சத்திரங்களுக்குப் பல கோடி ரூபாய் லாபத் தொகையைப் பிரித்துக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு மார்வெல் படங்களில் ‘அயர்ன் மேன்' ஆக வரும் ராபர்ட் டவுனி ஜூனியர், இந்த முறையின் மூலம் பல கோடி ரூபாய் ஈட்டினார். 

அவரின் சம்பளத்தைவிட, இப்படியான லாப பங்கீடு அதிகமாக இருந்தது. 
ஒரு படம் தயாரிக்கப்பட்ட பின்னர், அந்தப் படத்தை வாங்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட லாப சதவிகிதத்தைத் தயாரிப்பாளருக்குக் கொடுத்து முழு உரிமையையும் வாங்கிவிடும். இது படத் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பான லாபத்தை உறுதி செய்துவந்தது. இந்த முறையானது நெட்ஃபிளிக்ஸுக்கு, டிவி நிகழ்ச்சிகளில் கை கொடுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக