Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சூரசம்ஹாரம் - பகுதி 04...!

 https://tamil.oneindia.com/img/2018/11/tiruchendur-1542087527.jpg

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கந்த சஷ்டி ஸ்பெஷல் : மிரள வைக்கும் வரம்... அப்படி என்ன வரமாக இருக்கும்?


சூரபத்மன் கேட்கும் வரம் :

சிறிது நேரம் சிந்தித்த சூரபத்மன் தனது அழிவு என்பது தங்களின் சக்தியால் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், தங்களால் இருக்கக்கூடாது என்றும், என்னை அழிக்கக்கூடியவர் எந்த பெண்ணின் வயிற்றில் இருந்தும் பிறந்து இருக்கக்கூடாது என்றும் அவனால் மட்டுமே எனக்கு அழிவு நேரிட வேண்டும் என்ற வரத்தினை அளிக்க வேண்டும் என்று வேண்டினான் சூரபத்மன்.

எம்பெருமான் சூரபத்மன் வேண்டிய வரத்தையும், இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக அளித்தார். பின்பு, அவ்விடம் விட்டு மறைந்து கைலாயம் சென்றார். சிவபெருமான் மறைந்ததும் எந்தக் குழந்தையும் பெண்ணின் உதவியின்றி பிறந்திட இயலாது என்றும், தான் என்றும் அழிவில்லாதவன் என்றும், தன்னை அழிக்க எவராலும் இயலாது என்றும் ஆணவத்துடன் தான் பெற்ற வரத்தின் மகிழ்ச்சியை, தன் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் இருக்கும் இடத்தினை நோக்கி பயணிக்கத் தொடங்கினான். அசுரலோகம் சென்று சுக்கிராச்சாரியாரை வணங்கி தான் பெற்ற வரத்தினை பற்றி எடுத்துரைத்து அவரிடம் ஆசிப்பெற்றான். பின், சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்து வந்தான். பின்பு அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் தனது குடையின் கீழ் கொண்டு வந்தும், தனது சகோதரர்கள் மற்றும் தன்னைப் போன்ற பல அசுரர்களை கொண்டும் ஆட்சி புரிந்து வந்தான்.

சொர்க்கலோகம் சென்று இந்திரன் இல்லாமையால் இந்திரன் மகனான சயந்தன் முதலான சொர்க்கலோகத்தை சேர்ந்த தேவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எண்ணிலடங்கா பல துன்பங்களை அளித்து வந்தான். அவர்கள் அடையும் துன்பத்தை கண்டு அசுரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்திரனோ சூரபத்மனின் வருகையை உணர்ந்து இந்திரலோகம் விடுத்து பூலோகத்தில் வந்து மறைந்து கொண்டார். அசுரர்களின் அதர்ம செயலானது சொர்க்கலோகம் மட்டுமின்றி பூலோகத்தில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் பாதித்தது. ஜீவராசிகளுக்கு இவர்கள் இழைத்த தீமைகளை கண்ட தேவர்கள் அனைவரும், இந்திரனுடன் கைலாயம் சென்று சிவபெருமானிடம் தாங்கள் அடைந்து வரும் துன்பங்களில் இருந்து தங்களைக் காக்க வேண்டும் என்றும் பணிந்து நின்றனர்.

தேவர்கள் அடைந்து வந்த இன்னல்களை அறிந்த சிவபெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடியவன் விரைவில் வருவான் என்று கூறினார். சிவபெருமான் சூரபத்மனுக்கு அளித்த வரத்தின் அடிப்படையிலேயே அவனை அளிக்கக்கூடிய ஒருவரை உருவாக்கத் தொடங்கினார். அதாவது பார்வதிதேவி கருவுற்று ஈன்று எடுக்காமல் அந்த சக்தியினை உருவாக்க தொடங்கினார். தனது ஒற்றர்களின் மூலம் தேவர்கள் மற்றும் அவர்களின் வேந்தனான இந்திர தேவன் உட்பட அனைவரும் சிவபெருமானை காண கைலாயம் சென்றதை அறிந்து கொண்ட சூரபத்மன் தனது சகோதரன் ஆன தாரகாசுரனை அனுப்பி அவர்களை சிறை பிடிக்குமாறு உத்தரவிட்டான்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக